Tuesday, October 28, 2008

வாழ்கையே பாடம்

காதோரம் நரை !
அது கால வெள்ளத்தின் மிச்சம்!
அதில் சாயம் பூசுதல் காலனுக்கு கருப்புக் கொடியா?
கூடவே ஒடிவந்த பொழுதுகளும்,
ஒடிப்போன இளமையும்,
தங்கிவிட்ட முதுமையும் அனுபவ பாடம்.
----தபால் காரன்.

Monday, September 1, 2008

தேர்ந்தெடுத்த முடிவு- 1

விசிலடித்தபடி நிரஞன் அவனுடைய அறைக்குள் நுழைந்தான். நல்ல விதமாய் கல்யாணம் முடிந்சுருச்சி மாலையிலே நம்ம ஸ்டார் ஹோட்டல்ல ரிசெப்சன் அப்புறம் பிரிய தர்சினிக்கூட... நினைக்கவே உடெலெலாம் ஒரு பரவசம்,இனம் புரியாத சந்தோசம்.
சில நண்பர்கள் ,வியாபார நிமிர்த்தமாய் வெளிநாடு போய் இருக்கிறார்கள்.தவிர்க்க முடியாத பிஸினஸ் டூர்.இப்ப இருக்கிற போட்டி நாள்களில் சில பார்மால்டிஸ் தவிர்க முடியாது. அவ்வாறு திருமணத்திற்க்கு வராதவர்கள்,மாலை ரிசப்சன் வருவார்கள்.அப்படிவராதவங்களுக்கு தனியே ஒருநாள்பார்ட்டி கொடுத்து கொண்டாடிக்கலாம்.மே கம் இன் 'சார்'-எஸ் கம் இன். நிரஞ்ஜனின் காரியதரசன்(சி) முன்னா அவன் முன் நின்றார்.
சார் காலைல்ல புரசவாக்கம் ஆபிஸ்லெயிருந்து வாட்ச்மேன் ரொம்ப அவசரம்னு கூப்பிட்டான்,உங்களுக்கு யோரோ ரொம்ப முக்கியமான கடிதம், திருமணம் நடக்கும் பொழுது வரமுடியாத சூழ்னிலையின்னு சொல்லி உடனே நீங்க பாக்கனும்னு சொல்லிக்கொடுத்தாராம். சாரி அதனாலதான்...னு இழுத்தார் முன்னா! இட் ஸ் ஓக்கே, நீங்க எல்லாகெஸ்டெயும் நல்லா கனிச்சுக்குங்க! பிளீஸ். ஒகே ஸார்,பட் டொண்ட் ஆஸ்க் பிளீஸ். ஸாரி இது என் பர்ஸ்னல் அதனாலே அப்படிக்கேட்டுக்கிட்டேன்,இனி உங்கட்ட பிளீஸ் கேக்க மாட்டேன். ஒகேயா?! இருவரும் சப்த்தமிட்டுசிரித்து பின்..
முன்னா அங்கிருந்து நகர்ந்ததும் அந்த கவரை பிரித்தான் நிரஞ்சன்.
மாலை பிரியதர்சினி மிக உற்சாகமாக எல்லோரிடமும் கண்ணம் சிவக்கப் பேசினாள்.அடிக்கடி நிரஞ்சனை நோக்கினாள் ஆனால் அவன் முகத்தில் கல்யாணக்கலை தெரியவில்லை.ஏதோ பறிக்கொடுத்தவன் போல் இருந்தான்.ஏதேனும் தல வலியா?கேட்டும்விட்டாள்.இல்லையென்றான் அப்ப என்னவா இருக்கும்.பிஸினெஸ் ஏதாவது பிரச்சணையா?அப்படியும் எதுவும் தோனல!அப்பட்யிருந்தாலும் அதுக்கெல்லாம் பயப்படுறவன் கிடையாதே!எப்படி சமாளிக்கனுமோ அப்படி சமாளிக்க தெரிந்தவனாயிற்றே!சரி நம்ம இப்ப மனசப்போட்டுக்குழப்பிக்கவேண்டாம் ராத்திரி வந்ததும் பக்குவமா பேச்ச ஆரம்பிக்கலாம் என்று எண்ணியவள் வாழ்த்த வந்தவர்களிடம் ஆசிவாங்கலானால். போட்டோவுக்கு போஸ் கொடுத்து, வழிஞ்சி சிரித்து ,சமாளித்து வைத்தாள். ஒரு வழியாக ரிசப்சன் முடிந்தது.இரவு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடு,மன்னிக்கவும் அரன்மனையில் அந்த முதலிரவிற்கான அறை எழுத்தில் எழுதவியலாத அளவிற்கு அலங்கரிக்கப்பட்டு, நறுமணங்கள் வீசிக்கொண்டிருந்தது.மிக சன்னமாக சில்லென்று ,குளிரூட்டி மெல்ல காற்றை வீசிக்கொண்டிருந்தது.கதவை திறந்து கொண்டு பிரியதர்சினி நுழைந்தால். மாற்றான் மனைவியை அதிகம் வர்ணிக்க முடியாதவனாக இருப்பதால் மன்னிக்கவும்.மிக மெதுவாக நிரஞன் அமர்ந்திருந்த கட்டிலருகில் வந்துபால் சொம்பை மேசைமேல் வைத்துவிட்டு அவன் காலில் விழுந்தாள்.உடனே அவளைத்தொடாமலே நிரஞன்'எழுந்திரு பிரியா..என்ன ஆசிர்வாதம் பன்னுங்க!சரி.. எழுந்திரு சுரத்தையில்லாம அவன் குரல் இருந்ததை கவனித்தாள்.என்ன நிரஞ்- நானும் கவனிச்சிக்கிட்டுத்தான் வரேன், நீங்க ரொம்ப டல்லாவே தெரியிரீங்களே ஏன்?ஏதும் பிரச்சனையா? இல்ல உடம்புசரியில்லையா? இல்ல பிரியா நா நல்லத்தான் இருக்கேன்.எனக்கு ஒன்னும் கொறயில்ல,அம்மாவ நினச்சிக்கிட்டேன் அதான்.உங்க பீலிங்ஸ் எனக்கு புரியுதுங்க.எனக்கும் உங்களுக்கும் உள்ள பெரீய ஒத்தும அம்மா சின்ன வயசுலேயே இழந்தது தான்.பிரியா நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? எடுத்துக்க மாட்டேன் டியர்! சொல்லுங்க என்ன செய்யனும் நான்? நாம்னு சொல்லு! ஓ.கே! நாம் என்ன செய்யனும்.? நாம் இன்னக்கி முதலிரவு கொண்டாடாம ரெஸ்ட் எடுக்கனும் சரியா? ஓ.கே! -பட்-கேன் ஐ ஆஸ்க் சம்திங்? ஓய் நாட்! கேளு.யெனி ஸ்பெசல் ரீசன் பார் திஸ்? னத்திங் ரீசன் பட் ஒன்லி ஒன் ரீசன் தட் ரைட் நவ் மென்டலி ஐயம் நாட் ஓ.கே! சரி நிரஞ்- இத எப்ப வேணுன்னாளும் வச்சிக்கிடலாம் ஆனா, உடம்பும் மனசும் தான் முக்கியம்.
(தொடரும்)

தீர்புகள் திருத்தப்படுங்கோ!

பவர்ல உள்ளவங்க -
பவர தவறா பயன்படுத்தி!
பவரு வராம தடை செய்ராங்க!
அந்த பவர கொடுத்த மக்கள் இருட்ல தவிகிறாங்க!
ஒரு நா பவர தவறா பயன்படுத்துறவங்களுக்கு -
மக்கள் கொடுப்பாங்க 'ஸாக்'
--தபால் காரன்

Saturday, August 16, 2008

தங்கம் வென்ற கருப்புத்தங்கம்.

(10,000 மீட்டர் தூரத்தை கடந்து ஒலிம்பிக்ஸ்சில் தங்க பதக்கம் பெற்ற கருப்புத்தங்கம் எத்தியோப்பியசகோதரிக்கு இந்த கவிதை)
ஓட்டம் மற்றவர்களுக்கு விளையாட்டு!
உனக்கோ அதுவோ வயிற்றுப்பிழைப்பு!
நீயோ ஓடி ஓடி ஓடாய் போனவள் -
உன் குடும்பம் நிழலில் தங்க!
ஓட்டத்திற்கு ஊட்ட சத்துணவு தேவை மற்றவர்களுக்கு !
நீயோ ஒரு வேளை உணவிற்கே ஓடிக்கொண்டிருப்பவள்.
பலர் தங்கத்துக்கு ஓடுகிறார்கள்.
நீயோ உன் குடும்பம் நடக்க ஓடுகிறாய்.
நீ பெற்ற தங்க பதக்கம் தாங்கும் சக்தியுண்டா உன் கழுத்திற்கு?.
தங்க மலரே-
இனி நீ யென்றும் சரித்திரத்தில் வாழ்வாய்.
-----தபால்காரன்.

Friday, August 15, 2008

முரண்பாடு

ஒழுக்கம் உயர்வானது,
உயிரைவிட மேலானது
ஆசிரியர் குறளுக்கு விளக்கம் தந்தார்..
பின்ஒரு மாணாக்கனை நோக்கிச் சொன்னார்-
போய் பெட்டி கடையில் என் பேரச்சொல்லி,
சிகரெட் பாக்கெட் ஒண்ணு வாங்கிவா!
இங்கே அவ் வொழுக்கம் தீவைத்து கொழுத்தப்பட்டது ஆசிரியனால்.
---தபால்காரன்

சுதந்திர தேசமா இந்தியா?

நேற்று என் பிள்ளையின் பள்ளியில்,
சுதந்திர கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்,
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்...
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகளை கண்ட பின்,
என் மனம் சிந்தித்தது....
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய் ஒரு சிறுவன்னுக்கேனும் தந்தால்?
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே?
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை-
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆழ்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----தபால்காரன்.

Thursday, August 14, 2008

மீண்டும் சில ஹைகூக்களின் ஊர்வலம்

1சொடுக்கு-விரலின் சோம்பல் முறிப்பு முனங்கல்.
2ஓடும் ஆறு-எவ்வளவு ஓடினாலும் தாகம் பேறாத வீரன்.
3மரம்-வெயிலுக்கு நிழலில் ஒதுங்காத உயிர்.
4பறக்கும் பட்டம்-படித்தவனையும்,பாமரனையும் அன்னார்ந்து பார்கவைக்கும் காகிதப் பறவை.
5குடை- நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்னாடக அரசு.
----தபால்காரன்.

மூத்த குடிமக-(சனாதிபதி)!

ஆண்டான்டு காலமெல்லாம்,
மூத்த குடியாய்!
ஆண்மகன் ஆண்ட காலமெல்லாம்,
ஏதெனும் நல் மாற்றம் வரும்மென்றுகாத்திருந்து...
காத்திருந்து...
காலமெல்லாம்போன பின்னே,
நீ மூத்த குடிமகளானாய்!
பொருப்புகளை புரிந்துகொண்டு,
நாட்டிற்கு விளக்கேற்றுவாய் என உறுதியாய் நம்பிருந்தோம்.!
முன்சென்றவர்கள் போல் நீங்களும்,
வெரும் கை பொம்மைதானே?
இந்த மூத்த குடி மக(ன்) பதவி!
இனி இந்தியாவில் தேவைதானா?
----------தபால் காரன்

டாலர் கணவும் ஆகஸ்ட்15ம்!

(அன்னிய தேசத்தில் ஒரு சகோதரரின் கண்ணீர் மடல்)
ஓட்டமும் நடையுமாக,
வேகமும் விறுவிறுப்புமாக!
தூக்கத்தை மிச்சம் வைத்து.
முதல் நாள் தூக்கத்தை மறுநாள் தொடரும் கண்கள்!
குளிரை மறைக்க ஒல்லி உடம்பை குண்டாக்கும் சாகசம்!
ஒரு நாள்-ஒரு வேலை உணவு!
மூன்று மிடர் தேணீர் விழுங்கள்!
கூட்ட நெருசலில் பஸ்ஸிலோ இரைலிலோ-
மாறி மாறி செல்லும் அவஸ்தை!
அப்பாடா...வந்து விட்டோம் வேலைக்கு...!
என பெருமூச்சு விடும் கணத்தில்...
சம்ளத்தை கூட்டியோ அல்லது -
முன் சம்பளத்தையோ கேட்டு விடக்கூடாது என்பதற்காக,
திட்டிதீர்க்கும் முதலாளி,சூப்பர் வைசர்!
இன்னும் யாருக்கொள்ளாம் பயப்படக்கூடாது என்ற வெவஸ்த்தையே இல்லாமல்
"இவன் அவனா இருப்பானோ?" என்ற திகில்!
வேலை முடித்து நொந்து நூலாகி...
நடமாடும் பிணமாக அறை வந்து சேர்ந்து-
மறுநாள் விழிப்பதற்காக உறங்கி....
அப்பப்பா.....!சொல்லி முடியாது!
சம்பளமோ வரி-இன்ஸுரன்ஸ் என்று எடுத்துக்கொண்டு தருகையில்...
என் நாட்டின் சுதந்திரத்திற்காக ,
எம் முன்னோர்விட்ட குருதியும்,
மூச்சும் வீணாய் போய்விட்டதே...!
என்கிற நினைப்பைத்தவிர வேரொன்றும் செய்வதற்கில்லை....!
Written by:abu zulaiha,
www.adirai post.blogspot.com

Wednesday, August 13, 2008

அமெரிக்கா விரைகிறார் மன் மோகன் சிங் (சும்மா ஒரு விளையாட்டுக்கு)

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் மட்டுமே கிடைத்ததால் எதிரி(எதிர்)கட்சிகள் மன் மோகன் சிங்கை ஆட்சியை விட்டு இறங்கும் படி கோரி,நாடு முழுதும் பந்தில் ஈடுபட்டது.அனைவரும் மாயாவதியின் தலைமையில் மன் மோகன் சிங் வீட்டை முற்றுகையிடப் போவதாக,காரத்தெரிவித்தார்.இதில் தமிழ் நாட்டிலிருந்து சரத்குமாரும் அவருடைய ஒரே நம்பிக்கைத்தொண்டர் ராதிகா சரத்குமாரும் கலந்து கொளாவார்கள் என மக்கள் சமத்துவ கட்சி அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.பா.ஜ தலைவரில் முக்கியமானவரும் வருங்கால பிரதம வேட்பாளருமானஅத்வானி . இது இந்தியாவிற்கே அவமானமாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் அனு ஒப்பந்தம் போடும் போதே அமெரிக்கா வாங்கும் பதக்கத்தில்40% வீதம் இந்தியாவுக்கும் தரனும்னும் கேட்டிருப்போம் .அதற்கு அவர்க ள் ஒத்து வரலேன்னாலும் கால்ல விழுந்தாவது சம்மதிக்க வைத்திருப்போம்.இப்ப நாங்க கேட்பது பிரதமர் உடனடியாக அமெரிக்கா போய் தங்க பறிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்துப்போட்டு வந்தால் தான் பாராளு மன்றத்தை நடத்த விடுவோம்.அவ்வாறு இல்லையென்றால் நாளை மாயாவதி தலைமையில் மன் மோகன் வீட்டை முற்றுகை விடுவோம்.(அப்ப கூடி யிருந்த செய்தியாளரில் ஒருவர்)மாயாவதி உங்க அரசியல் எதிரி எப்படி அவருடைய தலைமையில் போராட ஒத்துக்கொண்டீர்கள்?இது மட்டும் தான் உங்களுக்குத்தெரியும்!மாயாவதிக்கு துணி துவைப்பது,சமையல் பண்ணுவதெல்லாம் இப்ப நான் தான். நாளை கூட மறியல் நடந்தால் மாயாவதிக்கு குடை பிடிக்கிறதுதான் என் வேலை.இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியம்? நான் அடுத்த பிரதமரா ஆகனும்ல!அப்ப மாயாவதி எப்படியும் நான் தான் அடுத்த பிரதமர்ன்னு சொல்றாரே?(எதுக்கு வம்புன்னு அத்வானி வேகமா காருக்குள் நுழைந்து கதவ மூட கார் வேகமா போ கிறது!(மாயாவதி வீட்டுக்கு?) அடுத்து செய்தியாளர்களெல்லாம் மன் மோகன் வீட்டுக்கு ப்போனா அவரு அங்கில்ல சோனியாவ சந்திக்க போய் உள்ளதா சொல்லப்பட உடனே செய்தியாளர்கள் சோனியா வீட்ட அடைகிறார்கள்.பிரதமர் அவசரமா அங்க கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சொல்றார் பிளீஸ் நோ கொஸ்டின்ஸ் டைமில்லசட்டை ,கோட் சூட்டெல்லாம் மடிச்சி வைக்கனும் அவசரமா அமெரிக்கா புறப்படுறேன்.மக்கள் உணர்வ மதிச்சி சோனியா இந்த முடிவ எடுத்திருக்காங்க இதனால நம் நாட்டுக்கு பெரும் புகழ் தேடி வரப்போகுது,எல்லாரும் இந்த ஒப்பந்தம் பாஸாகனும் கடவுள வேண்டுக்குங்க (சொல்லிவிட்டு விறுவிறுன்னு சோனியா வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார்??? ).
----தபால் காரன்.

Tuesday, August 12, 2008

கட்சத்தீவு

கட்சத்தீவு,
சாவை ருசி பார்க்கும் நாவு!
தினமும் மனித உயிரின் காவு.
அன்று இட்ட தானம்-
இன்றொ நமக்கே ஈனம்.
எல்லைகள் பறி மாற்றம்,
இன்றோ எல்லையில்லாத் தொல்லை.
நம்மவருக்கு அங்கே உரிமை இல்லை .
நித்தம்,சகோதரர்களின் ரத்தம் கலந்து-
செங்கடலாய்...
என்று ஓயும் சோக அலை!என்று வீசும் நல் மென் காற்று!
என்று ஓடும் வாழ்கை ஓடம்.
காலம் பதில் சொல்லுமா?
இல்லை கவலை தொடருமா?
---தபால் காரன்

Monday, August 11, 2008

வாக்காளர் அடையாள அட்டை.

பொதுமக்களின் இரத்தம் உறிஞ்சும் அட்டை.
எமாளிகளுக்கு ஏமாற்றுபவன் தரும் சிறப்பு முத்திரை.
(வாக்கு)உரிமைதந்து உரிமை பறிக்க ஒரு நுழைவுச் சீட்டு.
அறிவிக்கபடாத அடிமைச் சின்னம்.
வெற்றி கயவனுக்கு,தோல்வி நல்லவனுக்கு.
---தபால் காரன்.

Sunday, August 10, 2008

இரவு வடிந்த பின்...

இரவு வடிந்த பின்..
விடியல் படை யெடுக்கும்,
உலகம் விழித்தெழும்.
ஒவ்வொறு இருளும் இறந்து,
வெளிச்ச குழந்தை-
உலகின் மடியில் தவழும்.
இவையாவும் நடக்கும் இயல்புகள்தான்.
ஆனாலும்-ஒவ்வொரு இரவிலும் எழும் சந்தேகம்.
நாளை நாம் இருப்போமா?
நம்பிகை நம்பிகைத்தர,
ஒவ்வொரு இரவும் கழிகிறது.
---தபால் காரன்.

வெக்கத்தால் செய்த முகம்.

நான் மணமுடித மங்கைகக்கு- தங்கைஒருத்தியுண்டு.
அவள்தவழும் பிராயத்திலிருந்து,
வெக்கத்தை ஆடையாய் உடுத்தி,
யார் நோக்கினும்-
முகத்தை கையில் பொத்தி,
தவழும் பொழுதில்... பின்னரும்.
பால் வடியும் அவள் முகத்தை-
பார்தவர் சிலரெ!
அதில் அவள் தாய்,தந்தையும் கூட குறைவாய்....
எதற்கும் வெட்கபடும் அவளின்
வெட்கம்மேற்படுத்தும் திருமண -
புகைப்படத்தையேனும் முழுசா பார்த்திடனும்.
திருமண நாளில்,
யாருக்கெனும் புகைபடமெடுக்க,
அவள் சம்மதித்தால்.
---தபால் காரன்.

என் பேனாவிலிருந்து...

ஏ பெண்ணே!
நேற்று இரவில் நானும்,நீயும் கனாவில்சந்தித்து,
பின் தித்தித்தவைகள்.
இன்று,இப்பொழுது,
கைகூடி இருக்கும்,திகட்டாத தித்திப்பும்,
நாளை,தமிழ் சங்கமியில்-
தமிழர்களோடு சங்கமிக்கவிருப்பதும்.
இதுபோல் என்றும் தித்திக்கும் என்பது,
நம் உயிர் காதல் போல் திண்ணம்.
----தபால் காரன்.

இளமை கால காதல் கவிதை

ஏ நிலவே!
உன் முகத்திற்கு,
முக்காடு இட்டுக்கொள்.
என்னவள் இவ் உலகில் இருக்கும் வரை,
உனக்கு ஓய்வு நாட்கள்.
-தபால் காரன்.

காதல் கடுதாசி!

எத்தனையோ சுவாசம்-
என் நுரையீரலில் பறிமாறப்பட்டாலும்.
அத்தனைக்கும் அப்பால்-
உன்கடிதவாசகமில்லாவிட்டால்-
தீ பிடிக்கும் என் இதயத்தை-
உன்பழய கடித மின்னஞ்சல்,
தண்ணீர் ஊற்றி சரி செய்யும்.
---தபால் காரன்.

அம்மாடி இந்த உலகம்

அறிவிலி சீமானெனில் -
தலைமேல் தூக்கி கூத்தாடும் கூட்டம்.
அறிவுடையோன் ஏழையெனில்-
காலில் போட்டுகதகளி நடனமாடும் வர்க்கம்.
செயல் வீரன் சில சமயத்தில் தோற்றால்-
வீனன்,மூடன் என்றும்.
வெண் சாந்து, வெல்லாவி வேட்டிகட்டி,
வலம் வருகையை-
வாயார புகழ் துதித்தும்-
வேடிக்கை காட்டும் கூட்டத்தின் காலமிது.
அம்மாடி இந்த வேடம் தரித்த உலகில் -
வியக்கதகு விசயம்மெல்லம் பழிச்சொல்பெரும்.
--தபால் காரன்.

Friday, August 8, 2008

எதார்த்தம்

நெருப்பு கணத்தில்...
நிர்பந்ததில் எழுதிய கவிதையெல்லாம்-
பின் என் மனதையும்,மேனியை சில்லிடச் செய்தவை அதிகம்.
பொருமையாய்...கணங்களை விழுங்கி,
சிந்தித்து தீட்டிய பல கவிதை...
என்னை சோதிப்பதும்,சோர்வு கொள்ள செய்வதும் உண்டு.
எழுதுவதற்காக மட்டுமன்று வாசிக்கப்படவும்,
நேசிக்கப்படவும் வரம் வேண்டும்.
---தபால் காரன்.

இதயமும், நீயும் ஒன்றே

அன்பே!
நீ ஓயாமல் உழைத்துகொண்டிருக்கிறாய்!
நானுறங்கினாலும்,
என்னுடனே இருந்தும் நீ உறங்கவில்லை!
அதனால் தான் உன்னை இதயம் என்கிறேன்!
அது உறங்கினால் நானிறப்பேன்.
நீ இயங்கவில்லையென்றாலும் நானிறப்பேன்!
ஆக, இதயமும், நீயும் ஒன்றே!
---தபால் காரன்.

ஹைடெக்(கலி)காலம்.

ஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.
அரையில் பாதி கால் அளவே இன்று ஆடையானது.
ஒரு ஆனைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,
பல ஆனைச்சேர்ந்தால் நட்பு ஆனது.
படிக்காத காலத்தில் இல்லாத பினியெல்லாம்.
மெத்த படித்த பின் மேலும் கூடி புதிது,புதிதாய் தோன்றலானது.
ஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.
காண்ட்டீர் அக்காலம்.
ஆட வரும்(டிஸ்கோதே)அனைவருமே நன்பர்கள்.
அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன்,காதலி..
ஹைடெக்(கலி)காலம்.
ஆனும் பெண்னாய் மாறிடமுடியும்.
பெண்ணு ம் ஆனாய் மாறிட முடியும்.
விஞ்ஞானத்தின் விபரீத வளர்ச்சி-
காலத்தின் நாகரீக சிதைவு.
----(crown)தபால் காரன்.
(Mohamed thasthageer)

எந்தன் இனிய வீதி













எத்தனை வீதிகள் நான் கண்டதும்,
கடந்ததும்,கேள்விப்பட்டதும்...
வரை படத்தில் பார்த்ததும்,வண்ணப்புகைபடத்தில் பார்த்ததும்.
தொலைக்காட்சி வழிப் பார்த்ததும்.
பல் வகை வீதிகள்....
ஓரே மயான அமைதியாய் சில...
மரன ஓலமாய் சில...
கூட்டம்,கூட்டமாய் கூடவே மவுனமாய்..
கேளிக்கையாய் கூட்டத்துடன் சில...
மழைப்பொழிவாய்...
சிலப்பனிப்பொழிவாய்..
இன்ன பிற ,சுட்டெரிக்கும் சூரிய விளக்கில்.
பகட்டாய் சில, அலங்கோலாமாய் பல..
இப்படி நான் பார்த்த,அறிந்த,நடந்த வீதிகளில்,
என்னை முதலில் சுமந்த...என் பிஞ்சு பாதம் பதிந்த...
என் அன்னையும்,தந்தையும்,
என் உறவுகளும்,சுற்றமும் -
தினம் நடக்கும் என் பால்ய வீதி!
பல நேரம் துற் நாற்றமும்,
அலங் கோலமாய் இருப்பினும்,
நான் எங்கு சென்றாலும்,என்னைதொடருகிறது.
---தபால் காரன்

பத்திரிக்கை (அ)தர்மம்!

பத்தி,பத்தியாய் நடப்புகளை திரித்து செய்தி யென்று,
அதர்மம்,வண்மம்,காழ்புணர்சி,
வேண்டாதவரை சாடல்,
வேண்டியவரின் கூடல்!
கற்பனை சரக்கை,
விற்பனைகுதிரையில் ஏற்றி,
உலகமெலாம் வலம் வர செய்(தி)து,
கடிவாளம் கையில் பிடித்து
பிழை செய்யும் இக்காலப்பத்திரிக்கை.
வர்தக காற்றில் காலத்தே
தூற்றி கொள்ளும் இந்த நரிதந்திரகூட்டத்திற்கு
விசிறியாய் வாசகனாய்,
வேர்க்க,வேர்க்க செய்தீ படித்து பின்-
அதன் அதனை நம்பிடும் வேடிக்கை கூட்டம் வாடிகையாய்-
இருக்க கானும் பொழுதினில்.....
சுயபுத்தி நானமுற,சுயமரியாதை சுடுகிறதே!.
எனக்குள்ளே எழுந்த சினம் தீப்பிழம்பாய்....
என்று எம் மக்களுக்கும் எழும்?-
அன்றே தீய பல பத்திரிக்கை தீயிட்டு கொழுத்தபடும்.
பின் வரும் காலங்களில்
நல்ல பல பத்திரிக்கை தோன்றி-
திசையெங்கும் எட்டும் - நல் செய்தி.
------தபால் காரன்.

இன்றும் உயிருடன் இறந்தகாலம்

வண்ணமில்லா அன்னாள் புகைப்படம்!
சிரித்த முகத்துடன் எண்ணம் கவர,
நினைவு பின்னோக்கி கொக்கிப்போட!
வறுமை நெடியிலும் சின்ன வசந்தம் வீசிய தருணம்!
அன்று அடுத்த வேளை உணவு பகல் கணவு!
பசிதரும் மெல்லிய கிள்ளல்!
கூரை ஓட்டையின் வழி வந்து விழும் நிலாவின் எச்சில்!
காலம் இழுத்து வந்து வசதி தந்தாலும்,
ஒவ்வொரு நிமிடமும்....
வசதி காற்றின் குளிரிலும்- மேனி வேர்கிறது.
இன்றோ சுற்றமே போலியாய் ...
நிகழ்காலம்- வெப்பம் வீசும் காற்றாடியாய்!
வண்ண புகைப்படத்தில் கூட,
ஒப்பனை சிரிப்பை ஒட்ட வைக்கும் நிக(ழ)ல்(கோ)காலம்.
---தபால் காரன்

Thursday, August 7, 2008

மெய்யெனும் போர்வைக்குள்

மெய்யெனும் போர்வைக்குள்
பொய்யப்பர்கள் நடமாட காணீர்!
நெஞ்சினை நிமிர்த்தி! நெஞ்சுரம் கொண்டு,
படைதவனுக்கே அஞ்சி மற்றவர் முன்னின்று...
தீயவர்முகத்தில் காறி உமிழும் என்னை பொய்யரெனும்,
பொய்யாய் மூடிப்போட்ட,
மெய்யப்பன் யென தன்னை அழைக்கும்-
அந்த பொய்யர்கள் ஒரு நாள்,
படைத்தவனால் அடையாளம் கானப்படும் நாளில்,
பெய்யென பெய்யும் மழை!
---தபால் காரன்

மீன் கொத்தி பறவை நான்

வாய்புக்காக வட்டம் அடிக்கும் மீன் கொத்திப் பறவையாய்,
குளம்(அலுவலகம்) தோறும்....
வட்டமடித்து வலம் வந்தும்...
சிபாரிசு வலை வீசி, மீன் பிடிக்கும் வேட்டைகாரன் முன்...
தோற்றாலும்,மீண்டும்,மீண்டும் -
மீன் வேட்டையில் சோர்வடையாமல்...
வரும்மீனுக்காய்,கருவாடாய்காயும் மீன்கொத்தி நான்!.
---தபால் காரன்

ராமர் என்றாலே பாலமா?பாவமா?

பாலத்தில் விரிசல் வந்தால்சரி செய்யலாம்.
பாலத்தால் விரிசல் வந்தால்?
உறவிற்கு பாலம் கேட்டால்-
உறவுகள் பிரிக்கப்படுகிறது
நாட்டை இணைப்பதற்கு பதில்
நாட்டில் இதயங்கள் இடிக்கபடுகிறது.
பாபர் பள்ளிதான் இடிதீரெ-
சில பாவம் போக்க ராமர் பாலமாவது கட்டவிடுங்களே.
----தபால் காரன்

கைம் பெண்

குற்றமேசெய்யாமல்,காலத்தின் முழு ஆயுள் கைதி.
இறந்தவனுக்காக செத்து,செத்து வாழ்பவள்.
வண்ணம் இழந்த வெள்ளை மலர்.
இதயத்தில் முள்தாங்கிய வெள்ளை ரோசா.
கால் கட்டு(திருமணம்) அவிழ்ந்தும் சுதந்திரமாய் நடக்க முடியாதவள்.
இன்பத்தின் தூற்றல்.
சோகத்தின் வறட்டு சிரிப்பு.
கணவுகளின் பெரும் மூச்சு.
நிசத்தின் ஏக்கம்.
மகிழ்சியின் துக்கம்!
வாழ்வின் சாபம்.
ஆரோக்கியத்தின் முடம்.
அவசியத்தின் புறக்கனிப்பு.
தேவையின் பற்றாக்குறை
என்று தீறும் இந்த கொடுமைகள்?
அன்றே-
மாதம் மும்மாரி பொழியும்.
---தபால் காரன்

கவலைக்கு எத்தனை விரல்கள்

கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.
ஆனால் ,கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?
கவலையில்லாமல் நடக்கமுடியுமா?
வாழ்வின் தூரம் கடக்க முடியுமா?
நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால்...
கவலையா இருக்குது கவலைய நினச்சு!
--தபால் காரன்

காலம் மாறிடுச்சு கணிணி காலமாச்சு

நல்லா தலைவலி,
பொட்டெல்லாம் தெரிக்குது.
ஆபிஸூல பிராஜெக்ட் கழுதளவு!
லீவுபொபோட முடியாது.
இன்னும் தூங்கல பொழுதுவிடிஞ்சிருமெ!
டாட்டரை கின்டெர்கார்டெனில் போய்விடனும்.
அவள் அடுத்த ரூமில அசந்து தூங்குறா!
பிள்ளைய காலைலெ ஸ்கூலுக்கு விடச்சொன்னா-
இங்லீசுல காச்,மூச்னு கத்துவா!
ஐயம் ஆல்சோ வொர்க்கிங் ஐயம் நாட் ப்ரீ-
ஐ ஹவ் டு டூ லாட் ஆப் வொர்க் ரைட்னு கத்துவாள்!
என்ன செய்ய எல்லாம் தலைவிதி!
டைலனால் ரெண்டு போடுவோமா?
(மனதினில் மவுனமாய் சிந்தனை-
சட்டென்று பொட்டில் உதிதத்தது அம்மாவின் யோசனை).
இந்னேரம் அம்மாவ இருந்தா பச்சிலை பத்து போட்டு நெற்றியில் நீவிவிடிருப்பாள்.
போனதீபாவளிக்கு பத்து நிமிடம் பேசியது.
அம்மாவிடம் உடனே பேசினான்.
அவள் கனிவு,விசாரனை......அம்மானா,அம்மாதான்-
அம்மான்னாஅன்புதான்.
தலைவலி சற்று நீங்கியதை உணர்ந்தவனாக,
(மறுபடியும் உறங்க சென்று நன்று உறங்கிபோனான்- பொறியில் மாட்டிய கணினிபொறியாளன்).
---தபால் காரன்

இனி ஒரு விதி செய்வோம்

ஆத்தா தவறிட்டா!
அய்யப்பனுக்கு காதுகுத்து!
டூரிங் டாக்ஸீயிலெ புதுபடம்!பலான,பலான இத்தியாதிகள்!
(எத்தன வித தகவல் ,பேச்சு,காட்டு கத்தல்)
எப்படா ஒளியும் இந்த செல்லு போனு?
இனி எம் மவன் காலதிலேயாவது இத ஒளிக்க விதி செய்வோம்!
விஞ்சான ராசாகளா ஏதாவது செய்யுங்களே.
அளவுக்கு மிஞ்சினா அமுதமும் விசதாங்கோ!
விஞ்சான வீரிய வளர்ச்சி இப்ப காதுகுள்ள ஓனான்.
------தபால் காரன்

ஒரு கிராமத்தானின் புலம்பல்

கந்துக்கு வட்டி தறான்
மாதமானதும்களுத்துளே கைய வைய்கான்!
எதனமுற கட்டினாலும்-
எல நடிகை வயச போல, அதே தொக சொல்லுதான்!
காலமெல்லாம் ஒலச்சிஓடா போனலும்!
ஆஸ்தியெல்லாம்(ஓல குடிசையும்,ஓட்ட ஒடிசலுந்தான்)
கரஞ்சாலும் இவன் தொந்தரவு நிக்காதெ!
நா மறஞ்ச பின்னாடி எம்மவன நினச்சாதான் பாவமாயீக்குது.
---தபால் காரன்

ஆசிரி(றி)யன்

சீரிய பணி ஆசிரியர் பணி!
கற்றவரே காமுறுவர்!
சில கற்றவர் காமமுறும் அவலம்.
பள்ளி பாடம் சொல்லிக்கொடுவென்றால்,
பள்ளியறை பாடம் சொல்லும் காமுகனாய்.
கல்வி முறையைகலவி முறையாக்கும் கயவனாய்!
சாதி,மதம் பதிவுசெய்து கல்வியில் இடம் கொடுத்தாய்!
பின் பால்ய பெண்சாதிபிள்ளைகளை,
உன் பெண்சாதியாய் ஏன்டா பாவித்தாய்.?
மகரந்தச் சேர்க்கை பாடம் செல்லாமல்-
அந்த மலர்(தளிர்)களுடன் சேர்க்கை செய்தாய்.
மாணக்கர் தவறு செய்தால் இருக்கையின் மேல் ஏற்றி தண்டனை தருவாய்!
உன் தவறுகளை தண்டிக்க உன்னை தூக்கு மரம் ஏற்றலாமே?
நீ வாழ்கைப் புத்தகத்தில்அச்சுப்பிழை,
பிழைத்திருத்திகொள்,இல்லையெனில் திருத்தப்படுவாய்.
-----தபால் காரன்.

குறுக்கீடுகள்

ஆரம்பபள்ளி காலதில்,
ஏதேனும் பேசினால் இருக்கையின் மேல் ஏற்றிடும் ஆசிரியை!
விளையாடும் பொழுதினில்,
விகடமாய் பேசினால் நண்பர்கள் சொன்ன அருவை வாயமூடு!
பணி இடத்தில்...
பணியினூடேபேசிய பொழுதினில் உடன் பணி புரிந்தவர்கள் சொன்ன-
சும்மா தொன தொனதொனக்காத!
குடும்பத்தில் முக்கிய முடிவு எடுக்கயில்...
மூத்தவங்க இருக்கும் போது ,
முந்திரி கொட்டையாட்டம் பேசாதீங்க உங்க வாய தைக்கனும்!
-தடுத்துச் சொன்ன இல்லத்தரசி!
இத்தனை குறுக்கீடுகளினூடே,
நான் மனதில் பேசும் மவுனமொழியை,
யாராலும் தடுக்க முடியலெ என்ற ஆனந்தம் என்றும்,எப்பொழுதும்.
--தபால் காரன்.

ஹைகூகள்

1.என்னுடனே தொடர்ந்து வந்தது
எங்கே சென்றது? -இளமை.
2.குளிரிலும் வேர்க்கிறது!!-குளிர் பான பாட்டில்.
3.இருவரியாய் நீயும், நானும் -பொருள் பொதிந்த இன்ப ஹைகூ.
4.மன கூட்டில் ஆயிரம் ஆசைகள்,ஒவ்வொன்றாய் தலை காட்டும்-ஆமைபோல்.
5.இரவினில் கலந்து,பகலில் வெளிப்படும் தோழி- நிழல்.
6.அவள் மறதி போன்றவள்!! என்றும் மறக்க முடியாததால்.
7.வளைந்து ஓடிடும் ஆறு-இளைபாறினால் அது குட்டை.
8.ரகசியத்தை,பகீரங்க படுதியது-தொலைந்து போன காதல் கடிதம்.
9.அழியாத கிருக்கல் என் கைகளிலே-ரேகை.
10.ஆண்டுகளாய் கூடவே இருந்து பின் காட்டி கொடுத்த துரோகி-நாள் குறிப்பேடு.
11.எனக்கு நானே வலை விரித்தேன் -இரவில் கொசுத்தொல்லை
--தபால் காரன்.

Wednesday, August 6, 2008

விதியே முடிவெழுதும்

மயிரை வழித்தெடுத்து,
மொட்டைத் தலையில்...
உன் பெயர் எழுதி வலம் வந்தேன்!
எழுதியவை நீரில் எழுதி கரைவதுபோல்,
காலம் கரைத்தது.
பின் என் தலையினுள் இருந்த தலையெழுத்து!
நீ வேரொருத்தனுக்கு கழுத்தை நீட்ட சாட்சி கையெழுத்துப்போட்டது.

Monday, August 4, 2008

பாட்டியும் அவள் சொன்ன கதைகளும்.

நேற்று நண்பர்களுடன் குசாலம் படம் பார்த்தேன் !
கதை? ஆ... ஊ... சூப்பர்! யென்றனர்...
பரவாயில்லை ரகமே!.
சென்ற மாதம் தசாஅவதாரம் கதையில்லை நல்ல கலை நேர்த்தி!
தி டார்க் நைட் ஆங்கிலப்படம்-பிரம்மாண்ட பொழுது போக்கு!
ஹாரிப்பாட்டர் நம்ப முடியாத சாகாச சித்திரம்.
பல மொழிப்படம் ,பல நாட்டுப்படம் -
பார்த்ததும்,படித்ததும்,கதை கேட்டதும்...
இன்னும் என் ஜீவனில் ஓடிக்கொண்டிருக்கும்...
அதீத கற்பனை யற்ற !திரை வடிவம்,எழுத்துவடிவம் பெறாத..
காலம் கடந்தும்,கண் கொட்ட இரவில் விழித்திருக்கச் செய்ததும்!
என்னை பல நேரம் தாலாட்டுக்கு பதில் கேட்டுக்கொண்டே தூங்க வைத்ததும்!
நான் என்னுள் திருப்பி,திருப்பி அசைப்போட்ட....
பாட்டி சொன்னக் கதைகளே!!!
என்றும் என்னை கவர்கிறது.
பாவம் இக்கால பிள்ளைகள் பாட்டி கதைகளும் இல்லை,
கதை சொல்லக்கூடிய பாட்டிகளும் வீட்டில் இல்லை!
எல்லாப்பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்!.
----தபால் காரன்.

Friday, August 1, 2008

துயரதுக்கு தயாராகுங்கள் அம்மா!

போகிறேன் அம்மா!
வீட்டைவிட்டு வெளியில் போகும் போது,
போய் வருகிறேன் என்ற காலம் போய் விட்டது!
இன்றொ ஒவ்வொரு கணமும்,
தினமும் கவலையாயும்,கலவரமாயும் கரைகின்றது.
அமைதிப்பூங்கா என்ற சொல்லே கண்பட்டு,இன்று யுத்த பூமியாய்,
காற்றிலெல்லாம் ரத்த வாடையும்,செத்த வாடையும்.
அந்த ரத்த வாடை நெருங்கிய ரத்தத்தின் ரத்த வாடைகள்.
என் நேரத்திலும் ஏதும் நேரலாம், நானும் கொலைசெய்யப்படலாம்,
உருட்டு கட்டையெல்லம்இப்போதில்லை!
சூலாயுதமும்,ஆர்.டி.எக்ஸ்.குண்டுகளும்,
மதவெறிகளின் கையாயுதங்கள்.
மரணிக்கலாம்,அல்லது சாட்சி என்றும் கைது செய்யப்படலாம்.
பொய் வழக்கு போடப்படலாம்.
எல்லா துயரங்களை எதிர் கொள்ள தயார் படுத்திக்கொள் !
நானும் தான் தயாராகிவிட்டேன் துயரங்களை எதிர்கொள்ள-
ஒருகாள் வெளியில் போய் வருவதற்குள்...
அம்மா! நினைத்துப்பார்க்கவே நெஞ்சை அடைக்கிறது-
ஒரு வேளை நம் வீட்டுக்கு தீவைத்தோ!குண்டுவைத்தோ,
வீடு புகுந்து கலவர காரர்களால் வெட்டியோ....
அம்மா! நெஞ்செல்லம் வலிக்கிறது.
இப்படி தானமா ஸ்டைன் பாதிரியையும்,அவர் மகன் சின்ன பாலகனையும்...
இது போல் எத்தனை உயிர்கள்....
அன்றும்,இன்றும், நாளையும்....?
-----தபால்காரன்

வின்னேறிப் போவோம் ஏரியில் நீராட!


பசடேனா (கலிபோர்னியா): சனியின் துணைக் கோளும், அதன் சந்திரனுமான டைட்டனில் மிகப் பெரிய ஏரிகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1997ம் ஆண்டு காசினி என்ற விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் கடந்த 2004ம் ஆண்டு சனி கிரகம் அருகே சென்றடைந்தது. சனி கிரகத்தையும் அதன் துணைகோளான (சந்திரன்) டைட்டனையும் அது ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையி்ல் காசினி அனுப்பியுள்ள புதிய படங்களில் டைட்டனில் திரவங்கள் கொண்ட ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நாசா கூறியிருப்பதாவது: டைட்டனில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நீர் இருப்பதுபோல தோன்றினாலும் உறுதியாக கூறமுடியவில்லை. நீர் அல்லது ஈத்தேன் போன்ற வேறு ஏதாவது திரவம் போன்ற பொருள் அதில் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

ஒருவேளை அவை வெறும் இருள் சூழ்ந்த பெரும் பள்ளங்களாக இருக்க இருக்கக் கூடும். மீத்தேன், ஈத்தேன், லேசான ஹைட்ரோகார்பன் ஆகியவை அதில் இருக்கலாம்.

இதி்ல் ஒரு ஏரி சுமார் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கிறது என்று

Thursday, July 31, 2008

நவீன கேமிராவும்காம நாய்களின் பார்வையும்

சில நேரங்களில் சிலரின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாக மாறுகிறது.சமீபத்தில் என்னுடன் பணி புரியும் இரு மலையாளிகள் ஒரு வீடியோ கிளிப்-ஐ ப்ளூ டூத் -ல் தங்களுக்கு பரிமாரிக் கொண்டிருந்தனர், நினைப்பதற்கே அருவருப்பாக உள்ள ஒன்று அந்த கிளிப்பில் இருந்தது, இன்று சாதரணமாக பெரும்பாலான இளைஞர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ப்ளூ fபில்ம் இல்லை அது.பெண்களின் அங்கங்களை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கேமராக்கள் கழிவறை வரை சென்றிருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.அது ஏதோ ஒரு ஹாஸ்பிடல்லாகத்தான் இருக்கவேண்டும். ஒரு மிருகம் பெண்களின் கழிவறையின் மேல் பகுதியில் கேமராவைப் பொருத்திவிட்டுச் சென்று விட்டது அதில் அன்று இயற்கைத்தேவையைப் பூர்த்தி செய்ய வந்த அனைவரும் (அந்த கேமராவில்) படம் பிடிக்கப்பட்டு விட்டனர் அவை இன்று சர்வ சாதரணமாக ப்ளூ டூத்தில் பரிமாரப்பட்டுக் கொண்டிருக்கிறது.எது எதெற்க்கெல்லாம் பெண்கள் பயப்பட வேண்டியிருக்கிறது இனி பொதுக் கழிவரையை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் அதை முழுவதுமாக சோதனை செய்து விட்டுத்தான் பயன் படுத்த வேண்டும் போலிருக்கிறது. என்ன ஒரு கொடுமை.என்னதான் நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பெண்களை இன்றும் போகப் பொருளாகத்தான் உலகம் பார்க்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் இல்லாமல் வேறென்ன.இது பெண் இனத்தை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் பலமான தாக்குதல், நல்ல மனம் உள்ள யாரலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு அவமானகரமான வரலாற்றுக் கருப்புப் புள்ளி.
நன்றி:www.adiraipost.blogspot.com
Posted by:www.crownthasthageer.blogspot.com( அரிச்சுவடி)

நடிகனடா நான் நடிகனடா

நடிகனடா நான் நடிகனடா-வேசம் போடும் நடிகனடா
கோசம் போட ஒரு கோடி மூடனுண்டு!
பாசம் காட்ட பல கோடிபக்தனுண்டு!
வேசம் கலஞ்சாலும்,
மோசம் செஞ்சாலும் ஏன் என்று எதிர்க்க ஆளுமில்ல!
என கடவுளா மதிப்பான்,உயிரையும் கொடுப்பான் தமிழன்!
நான் ஒருதவ சொன்னா- நூறு தடவ குட்டிகரணம் போடுவான்!
சாமியே சரணம் ரஜினியே காரணம் என்று பாடுவான்!
தமிழணும் ,தமிழணும் எனக்காய் மோதுவான்!
தலைவா,தலைவா என தினமும் பாடுவான்.
சோத்துக்கு தினம் போராடுவான்!
என் படத்துக்கு தினம் மாலைப்போடுவான்!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணினால் கேட்க யாருமில்ல!
பிறந்த மண்ணுக்கு அள்ளி கொடுக்க தடுக்க யாருமில்ல!
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா-
சின்ன குழந்தையும் சொல்லும்!
நடிகனடா தமிழ் நாட்டுக்கு கர்னாடக நடிகனடா!

-------தபால் காரன்.

Wednesday, July 30, 2008

அவர்களிடம் போய் சொல்வார்யாரோ?(கவிதையாய் ஒரு கதை)

காதலன்:(மனதினுல் கேட்கும் கேள்வி)

கண்ணே!

கணினி வந்திருந்த சில ஆண்டுகளில்..


நான் உன் வீட்டுக்கு உன் அக்காவான என் ஆசிரியையிடம்

கல்வி பயிற்சி பாடம் கற்று வந்த நாள் முதல்..

உன் மேல் காதல் கொண்டதை...

காகிதத்தில் கவிதையென்ற பெயரில் என் காதலை

கிருக்கிவைத்த காகிதத்தை-

உன் வீட்டு தாழ்வாரத்தில் செறுகி வைத்தேன்,

என்றாவது நீ பார்த்து காதலிப்பததை

புரிந்துகொள்வாய்யென்று.

ஏழு ஆண்டுகள் ஆகிய பின்னும் நீ இன்னும் பார்க்க

வில்லையென்பதை உன் வீட்டில் நலம்விசாரிக்க

வந்ததுபோல்,தாழ்வாரத்தை துழாவினேன் -

இன்னும் என் காதலை சுமந்த கடிதம் அங்கே!

அன்பே ! என்று நீ பார்ப்பாய்?

இல்லையாயினும், உன் வீட்டில் யாரானும் பார்த்து

முடிவுஒன்று நேரட்டுமே!

அதுவரை காதல் வேதனையாய் நெஞ்சை குடைகிறதே!

(அதே வேளை காதலியும் மனதுக்குள்..

வீட்டு தாழ்வாரத்தைப்பார்த்த படி நினைவுகளால் கேட்டும் கேள்வி)

நேற்று நீ என் வீடு வந்தாய்!

வண்ணத்துப்பூச்சி என் உள்ளத்தில் பறக்க கண்டேண்.

அன்பே! நீயனக்கு எழுத்திய காதல் கடிதம் படித்து,

நான் என் காதலை பதிலாய் காகிதத்தில் எழுதி

அத்தாழ்வாரத்தில் செறுகி வைத்தேன்!

ஆண்டுகள் ஏழு ஆயின!

நீ நேற்று வந்ததும்,உன் கைகள் தாழ்வாரத்தை வருடியதும்
வாடிய மனம் மகிழ்வு கொண்டது!

பின் நீ அக்கடிதம் எடுத்துப்பாராமல் சென்றதும் என் சுவாசம்

சுருங்கியது என் செய்வேன்?


என்னவனே! நீயெனை இப்பொழுதும் விரும்புகிறாயா

இல்லையா?

(யாரவது அவர்களிடம் போய் அவர்தம் காதலை

சொல்லுங்களேன்)

---தபால் காரன்.




விட்டுக்கொடுப்பதும்,விட்டுக்கொடுக்காததும்.

குழந்தைக்கு பாலூட்டும் தாயின் பிரியம்!
தங்கைக்கு தன் பொருளை விட்டுக்கொடுக்கும் பிரியம்!
அண்ணனுக்கு தீண் பண்டம் பிட்டுக்கொடுக்கும் பிரியம்!
இவை யெல்லாம் விட்டுக்கொடுக்கும் பிரியங்கள்!
அன்பே!
உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்...
உன் மேல் கொண்ட அதீத பிரியத்தினால்.
-----தபால் காரன்.

இவையாவும் ....

இன்று எண்ணிலடங்கா இணைத்தளங்கள்...
எங்கும் பரவிய எழுதாளர்கள்!
ஏராள கதை,கட்டுரை,கவிதைகள்.
வியாபாரப்போட்டி போல்,வலைத்தள போட்டி!
யார் தொடர்வார்...
யார்வீழ்வார்?
பார்வையாளனும் பல கோடி!
இவற்றுள் நானும் போட்டி போட,
இலகுவாய் எழுதுவதற்கு!உனக்கு நான்னெழுத்தி,எழுதி...
பொருமைமையாய் நீ படித்து-
காதல் சொன்னது தான் நான் கண்ட அரிசுவடியும்,கடுதாசிகளும்.
இங்கு சங்கமிக்கும்!
இதற்கு நீயும்,
என் கிறுக்கள்களை வாங்கி கொண்ட-
நமதூர் அஞ்சல் பெட்டியும்,
சுமந்து வந்த தபால் காரனும் ,
நண்பர்கள் கொண்டுவந்த தகவலும்-
காரணமும், காரணியும்.
-தபால் காரன்

Tuesday, July 29, 2008

தேவையின் கொலை

குற்றத்தில் புழுவாய் நெளிந்தேன்-
புழுவை தூண்டிலில் மாட்டியப்பின்.
மீன் தூண்டிலில் மாட்டித்துடித்ததும் நானும் துடித்தேன்.
பின் மீன் குழம்பு நியாபகம் வர,
மறந்தேன் மீனுக்குத்துடிப்பதை!
புழு தின்ற மீன் துடிக்கவில்லை!
மீன் திங்க நான் துடிப்பதா?
வயிற்றுப்பாடமும், நாவின் சுவைத்தவிப்பும் மறக்கச் செய்தது!
இது தேவையின் கொலை,
சிந்தைச்சொல்லியது,
குழம்பில் மீன் துள்ளியது.
------தபால்காரன்.

Monday, July 28, 2008

வாழ்க்கைதத்துவம்.

ஆசை மரமாய் வளர்ந்தபின்,
வொவ்வொருத்தேவைகளும், இலைப்போல் துளிர்விட...
பூ,பிஞ்சாகி பின் காயாகி,பின் கனியான வெற்றிதருணங்கள்.
தொடர்ந்து கிளைப்பரப்பும் புகழ்'- வரும் நேரம்...
நம்பிக்கை வேர்- சில சோதனை கரையானால் அரிக்கப்படின்,
செழித்து வளர்ந்த மரம் வீழும் அதுவே,
மணித வாழ்வின் வாழ்க்கைதத்துவம்.
----தபால்காரன்.

Friday, July 25, 2008

WHO SAID THIS A.R.RAHMAN?!!!

உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும் வரை உங்களின் தோழனாக இருக்க வேண்டும்என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு நிறைவேறுமா இசைப்புயலே?(புரட்சிநம்பி, அரும்பாக்கம்.)A.R.RAHMAN:உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம் இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான்.(சகோதரன்,ரஹ்மானுக்கு,தாய்னாட்டிற்கு நல்ல பக்தனாக இரு என்று நீங்கள் சிந்தித்து சொன்னதா?உடனே அன் நிமிடம் தோன்றியதைச் சொன்னதா?தாய் நாட்டிற்க்கு நல்ல குடிமகனாய் இரு என்றிருக்கலேமே என்பது எம் மனதில் எழுந்தது.)
Posted by crown

எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)

சீக்கிரம் போங்க..
அப்படி போனா உன் உடம்புதாங்காது புள்ள!
நல்லாயிருப்பியோ சீக்கிரமா ஒட்டுங்க!
வீட்டுக்கு போவனும்... நா காட்டுக்கா ஓட்டுறேன் வீட்டுக்குத்தான் சித்த சும்மயிரு..
எல்லாம் உன் நல்லத்துக்குத்தான்.
நீங்க டைவர்(டிரைவர்)தொழில் பாக்கிக..இப்பத்தானே உங்க லச்சணத்த பாக்கேன்...
பொரளி பனாத புள்ள இப்பத்தான் ஆஸ்சுபத்திரிலெ புள்ள பெத்துட்டு வற,
வேகமா போனாக்கா புள்ளக்கிஆவாது,உனக்கும் பச்ச உடம்புதாங்காது.
என் அவசரம் தெரியல ஆரு நாளா மூத்தது ரெண்ட பாக்கம எம்மனசு கெட ந்து அடிச்சுக்குது உங்களுக்கென்ன தெரியும்?
அதுக என்ன பாக்காம என்ன பாடு படுதுகளோ?
நல்லா சாப்பிடுத்துங்களா,தூங்குனதுகளா??!!!
(புலம்பல் தொடருது...)
-தபால் காரன்

Wednesday, July 23, 2008

மாற்றிச்செய்யும் உலகம்.

விருதுக்காக எழுதினேன் விமர்சனம் எழுந்தது!
விருது கிடைக்கவில்லை!விமர்சனத்திற்காகவும்,
விளம்பரத்திற்காகவும் எழுதினேன்-
விருது கிடைத்தது,விளம்பரம் கிடைக்கவில்லை.
--தபால்காரன்

செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ரொம்ப ஈயப்படும்.

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டம்
கும்பகோணம் அருகே அரசு அங்கீகாரம் பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியினுள் போராட்டக்குழுவினர் மற்றும் மாணவ, மாணவியர் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
அசூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கடந்த ஆண்டு 92 மாணவ, மாணவிகள் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டனர்.
இக்கல்லூரிக்கு தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசு பொதுத்தேர்வை எழுத முடியாமல் 92 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வன்னியர் சங்கம், தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் பெருமன்றம், அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி ஆகியவைகள் இணைந்து கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாணவ, மாணவியர், அரசியல் கட்சியினர் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அக்கல்லூரி உள்ளே உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர்.
இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ராஜசேகர், மாவட்டச் செயலாளர் ரகுநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி குடந்தை அரசன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸôர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.

Tuesday, July 22, 2008

குப்பையிலிருந்து டேக் ஆப் விண்வெளிக்கு.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு சாக்லெட் தயாரிப்பு நிறுவனம், விண்வெளிக்கு செல்வதற்கு ஒரு போட்டி அறிவித்தது. பரிசுக்குரிய எண் இடம்பெற்றுள்ள தனது கம்பெனியின் சாக்லெட்டை வாங்குபவர், இந்த வாய்ப்பை பெறலாம் என்று அறிவித்தது.பிரான்சு நாட்டைச் சேர்ந்த மதில்டே எப்ரான் என்ற 32 வயதான விமான பணிப்பெண், அந்நிறுவனத்தின் சாக்லெட்டை வாங்கினார். சாக்லெட்டை சாப்பிட்டு விட்டு, அந்த உறையை குப்பையில் போட்டு விட்டார்.நமக்கு எங்கே பரிசு கிடைக்க போகிறது? என்பதே அவரது எண்ணம். 2 மணி நேரத்துக்கு பிறகு, அவருக்கு தனது அதிர்ஷ்டத்தை பரிசோதித்து பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.எனவே, குப்பையை கிளறி ஒருவழியாக சாக்லெட் உறையை கண்டுபிடித்தார். அதில் இருந்த எண்தான், பரிசுக்குரிய எண் என்று தெரிய வந்தது. இதனால் விண்வெளிக்கு பயணிக்கும் அதிர்ஷ்டத்தை அவர் பெற்றுள்ளார்.அதற்கு முன்பாக, விண்வெளியில் பறப்பதற்கான பயிற்சி, அமெரிக்காவில் அவருக்கு 4 நாட்கள் அளிக்கப்படுகிறது

கொரியர் மூலம் கோகைன் சப்ளை

அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது சென்னை காவல்துறை. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கர போதைப் பொருளான கோகைன், ஏதோ சர்க்கரை, மைதா ரேஞ்சிற்கு படு எளிதாக சென்னைக்குள் புழங்கிக் கொண்டிருப்பது தெரிந்துதான் இப்படி ஷாக்காகியிருக்கிறது.
இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.
``போனவாரம் எங்க உளவுப்பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் வந்துச்சு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தப்படுறதா தகவல். நான் எங்க டீமோட போய் சம்பந்தப்பட்ட கொரியர் ஆபீஸைச் சுற்றி பொறி வைத்துக் காத்திருந்தோம். அப்போதுதான் கென்யாவைச் சேர்ந்த ஜோசப் மியுகோ என்கிற வெளிநாட்டு ஸ்டூடண்ட், அந்த குறிப்பிட்ட கொரியர் பார்சலை வாங்க வந்திருந்தார். சந்தேகப்பட்டது போலவே அந்த பார்சல்ல 15 கிராம் கோகைன் ஒரு டைரியில மறைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். இது ரொம்பவும் பயங்கரமான போதைப்பொருள். ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இதோட பயங்கரத் தன்மைக்காகவே உலகம் முழுக்க இந்த போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்காவில் விளையிற இந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது சென்னை காவல்துறை. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கர போதைப் பொருளான கோகைன், ஏதோ சர்க்கரை, மைதா ரேஞ்சிற்கு படு எளிதாக சென்னைக்குள் புழங்கிக் கொண்டிருப்பது தெரிந்துதான் இப்படி ஷாக்காகியிருக்கிறது.
இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.
``போனவாரம் எங்க உளவுப்பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் வந்துச்சு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தப்படுறதா தகவல். நான் எங்க டீமோட போய் சம்பந்தப்பட்ட கொரியர் ஆபீஸைச் சுற்றி பொறி வைத்துக் காத்திருந்தோம். அப்போதுதான் கென்யாவைச் சேர்ந்த ஜோசப் மியுகோ என்கிற வெளிநாட்டு ஸ்டூடண்ட், அந்த குறிப்பிட்ட கொரியர் பார்சலை வாங்க வந்திருந்தார். சந்தேகப்பட்டது போலவே அந்த பார்சல்ல 15 கிராம் கோகைன் ஒரு டைரியில மறைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். இது ரொம்பவும் பயங்கரமான போதைப்பொருள். ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இதோட பயங்கரத் தன்மைக்காகவே உலகம் முழுக்க இந்த போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்காவில் விளையிற இந்த கோகைன் முதல்முறையாக சென்னையில் பிடிபட்டிருக்கிறது. சென்னையில் ஹைசொசைட்டியில பரவியிருக்கிற பார்ட்டி கலாச்சாரத்துல ஈடுபட்டு வருகிற முக்கிய வி.ஐ.பி.களுக்கு சப்ளை பண்றதுதான் இவனோட வேலை. போன் மூலமா பார்ட்டிகளை காண்டாக்ட் பண்ணி, அவங்க கார்ல வந்து வாங்கிட்டுப் போவதாகச் சொல்றான். பிடிபட்டது இப்பதான் என்றாலும், இது பல காலமா நடந்துகிட்டு வந்திருக்கு'' என்று திகில் கிளப்பினார் டேவிட்சன்.
உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இன்னும் பகீர் ரகம். ``நீண்ட நாட்களாகவே கொரியர் மூலமா போதைக் கடத்தல் நடக்கிறதா தகவல் வந்துகிட்டேயிருந்தது. இப்பதான் மாட்டியிருக்காங்க. இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். இதுல `இண்டர்நேஷனல் ஸ்மக்லர்' தொடர்பு இல்லாம இருக்காது. இதுக்குக் காரணம் இங்க இருக்குற சில தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிற பார்ட்டி மூடுதான். இவங்களோட அதீத என்ஜாய்மெண்ட் அடுத்த கட்டத்தைத் தாண்டும்போது எல்லாருக்கும் இந்த போதை தேவைப்படுது. அதுக்கு வெளிநாட்டு மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இங்கே வேண்டிய உதவிகளைச் செய்தும், பணம் கொடுத்தும் எப்படியாவது தங்கள் தேவைக்கேற்ற கோகைன் கிடைக்க உதவும்படி கேட்கிறாங்க. பணத்து ஆசையால் இந்த கென்யா ஸ்டூடண்ட் மாதிரியான ஆட்கள் எப்படியோ கடத்தல் `டான்'களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலமா பல வழிகளில் கோகைனை கொண்டு வர வைக்கிறார்கள். ஆனால் இவங்களுக்கு தொழிலதிபர்களோட இடமோ, விபரமோ தெரியாது. இப்போ புதுசா கிடைச்ச தகவல், கோகைன் பார்ட்டி கலாசாரம் இப்ப கோடம்பாக்க இளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மத்தியில வேகமா பரவிகிட்டிருக்கு என்பதுதான். இதுதான் ரொம்ப கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இது தொடர்பா யார்? யார்? இதைப் பயன்படுத்துறாங்க. இவங்களுக்கு சப்ளை பண்றது யார்? என்கிற விவரத்தை ரகசியமா சேகரிக்கிறோம்'' என்று கவலையோடு சொன்னார்.
``இப்போ கொரியர்லதான் எந்தப் பொருளையும் சுலபமா அனுப்ப முடியும். செக்கிங் கிடையாது. ஆள் யார்னு தெரியவேண்டியதில்ல. இப்படி பல வசதிகள் இருக்கிறதால கடத்தல்காரங்க கொரியரைப் பயன்படுத்துறாங்க. இது சம்பந்தமா கொரியர் நிறுவனங்களை அழைத்து எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுத்தோம். அதுல மாட்டினதுதான் இந்த கென்யா ஸ்டூடண்ட். வெளிநாட்டுலருந்து வந்து படிக்கிற மாணவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே கண்காணிக்கணும். அப்போதான் இதுமாதிரியான கடத்தலைத் தவிர்க்க முடியும்'' என்றார், போதை தடுப்புப் பிரிவு அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம்..முதல்முறையாக சென்னையில் பிடிபட்டிருக்கிறது. சென்னையில் ஹைசொசைட்டியில பரவியிருக்கிற பார்ட்டி கலாச்சாரத்துல ஈடுபட்டு வருகிற முக்கிய வி.ஐ.பி.களுக்கு சப்ளை பண்றதுதான் இவனோட வேலை. போன் மூலமா பார்ட்டிகளை காண்டாக்ட் பண்ணி, அவங்க கார்ல வந்து வாங்கிட்டுப் போவதாகச் சொல்றான். பிடிபட்டது இப்பதான் என்றாலும், இது பல காலமா நடந்துகிட்டு வந்திருக்கு'' என்று திகில் கிளப்பினார் டேவிட்சன்.
உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இன்னும் பகீர் ரகம். ``நீண்ட நாட்களாகவே கொரியர் மூலமா போதைக் கடத்தல் நடக்கிறதா தகவல் வந்துகிட்டேயிருந்தது. இப்பதான் மாட்டியிருக்காங்க. இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். இதுல `இண்டர்நேஷனல் ஸ்மக்லர்' தொடர்பு இல்லாம இருக்காது. இதுக்குக் காரணம் இங்க இருக்குற சில தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிற பார்ட்டி மூடுதான். இவங்களோட அதீத என்ஜாய்மெண்ட் அடுத்த கட்டத்தைத் தாண்டும்போது எல்லாருக்கும் இந்த போதை தேவைப்படுது. அதுக்கு வெளிநாட்டு மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இங்கே வேண்டிய உதவிகளைச் செய்தும், பணம் கொடுத்தும் எப்படியாவது தங்கள் தேவைக்கேற்ற கோகைன் கிடைக்க உதவும்படி கேட்கிறாங்க. பணத்து ஆசையால் இந்த கென்யா ஸ்டூடண்ட் மாதிரியான ஆட்கள் எப்படியோ கடத்தல் `டான்'களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலமா பல வழிகளில் கோகைனை கொண்டு வர வைக்கிறார்கள். ஆனால் இவங்களுக்கு தொழிலதிபர்களோட இடமோ, விபரமோ தெரியாது. இப்போ புதுசா கிடைச்ச தகவல், கோகைன் பார்ட்டி கலாசாரம் இப்ப கோடம்பாக்க இளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மத்தியில வேகமா பரவிகிட்டிருக்கு என்பதுதான். இதுதான் ரொம்ப கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இது தொடர்பா யார்? யார்? இதைப் பயன்படுத்துறாங்க. இவங்களுக்கு சப்ளை பண்றது யார்? என்கிற விவரத்தை ரகசியமா சேகரிக்கிறோம்'' என்று கவலையோடு சொன்னார்.
``இப்போ கொரியர்லதான் எந்தப் பொருளையும் சுலபமா அனுப்ப முடியும். செக்கிங் கிடையாது. ஆள் யார்னு தெரியவேண்டியதில்ல. இப்படி பல வசதிகள் இருக்கிறதால கடத்தல்காரங்க கொரியரைப் பயன்படுத்துறாங்க. இது சம்பந்தமா கொரியர் நிறுவனங்களை அழைத்து எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுத்தோம். அதுல மாட்டினதுதான் இந்த கென்யா ஸ்டூடண்ட். வெளிநாட்டுலருந்து வந்து படிக்கிற மாணவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே கண்காணிக்கணும். அப்போதான் இதுமாதிரியான கடத்தலைத் தவிர்க்க முடியும்'' என்றார், போதை தடுப்புப் பிரிவு அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம்..

Monday, July 21, 2008

சிந்திக்க சில வரிகள்

மனிதவாழ்கை மகத்தான அருமைக்குரியது. ஒவ்வொறு வருடமும் பிறந்தநாள் வருகிறது.சிலருக்கு விதிவிலக்கு(லீப்) 4வருடங்களில்). சொல்லவந்த விடயம்-யாதெனில் பலர் ஆடம்பரமாய் வேண்டாதஅனாவசிய செலவுசெய்து விழாப்போல் கொண்டடுகின்றனர்.அவ்வாறுகொண்டாடப்படும் ஒவ்வொருபிறந்தநாளும்364.99நாட்கள்இறந்தபின்வருவதே.இன்று-நாளைய, இறந்தநாள். நாட்களும்,வருடங்களும் வந்துபோய் கொண்டிருப்பதில் பிறந்த நாளன்று மெழுகுவர்தி கொழுத்திஅணைப்பதனால் பயன்உண்டா? யாராவதுஒருத்தர் வாழ்வில் விளக்கெற்றலாமே.பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென்றால் மிக எளிய முறையில் செய்யலாம்.தெருவில் உள்ள ஏழை ஒன்றோ ,இரண்டோ குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கோ,மாதத்திற்கோ ஆகும் செலவை ஏற்கலாமே?. மேலும் தியானம்...இன்னும் தெய்வவழிபாடில் கவனம் செலுத்தலாமே?.அவ்வாறு செய்யின் நம் மறைவிற்கு பின் ஒரு சிலராவது கண்னீர்சிந்தி நமக்காய்இறைவனிடம் வேண்டினால் நாம் செய்த பலபாவங்களில் சில மன்னிக்கப்படலாம். குறிப்பு:இஸ்லாமியர் பிறந்த நாள் கொண்டாடமாட்டார்கள்.
Thanks for:www.tamilsangami.blogspot.com

"நடப்பதெல்லாம் நன்மைக்கே!"

"நடை" ஒரு கலை. வாழும் கலை.எல்லாம் வல்ல இறைவன் நம்மை அழகுற படைத்து வடிவமைதுள்ளான். நாம் மறு இடம் செல்ல நமக்குகால்களை தந்துள்ளான்.இடப்பெயர்ச்சி அதி முக்கியம் அல்லவா? இன்று நம்மில் எத்தனை பேர் நடக்கிறோம்.காலை எழுந்து இரவு படுக்கும் வரை,பைக்,கார் ,ஆட்டோ ,பஸ் என ஊர்வதில்தான் நாம் கவனம் செலுத்துகிறோம்,சிறு தூரம் போக வேண்டும் என்றாலும் நமக்கு "வீல்" தேவைப்படுகிறது, ஆனால் யதார்த்தம் என்ன என்றால்,நடப்பது ஒன்று மட்டுமே நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது.ஆனாலும் இதை நிறைய பேர் உணர்ந்ததாக இல்லை.நடப்பதால் சில பல நோய்கள் அண்டாது.டயாபடீஸ் எனும் நீரிழிவு நோய்க்கு அரு மருந்து நடை,நடை,நடைதான். நம் உடலில் உள்ள நச்சு அமிலங்கள் நடப்பதால் வெளியாகி விடுகின்றன.ஆதலால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு பொலிவு பெறுகிறது . நடைக்கு மிஞ்சி வேறு இல்லை எனும் அளவுக்கு ரொம்ப முக்கியம்.நடக்கவும் செய்யாமல்,நோய்களையும் விலைக்கு வாங்கி கொண்டு ,மாத்திரைகளை எதோ சாப்பாடு மாதிரி விழுங்கிக்கொண்டு,கடைசியில்,உணவேமருந்து எனும் நிலை மாறி,மருந்தே உணவு எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறோம் எனவே இனியாவது நடைக்கு முக்கியத்துவம் கொடுத்து,தினமும் சரிவர செய்தால்,உடல்,உள்ளம்,பயன் பெறும்,காசுந்தேன்!
என்றும்
அன்புடன்ஏ.ஆர்.அப்துல் லத்தீப்.
Thanks for:www. tamilsangami.blogspot.com

காதலனுக்கு,திருமண அழைப்பு(வசன கவித)

அன்பின் அன்பானவருக்கு,
நம் காதல் எவ்வளவு புனிதமானது!!!
நமக்கு மட்டுமே தெரிந்தது!
எந்த காலத்திலும்,
ஒருத்தரை மற்றவர் காட்டிக்கொடுக்க கூடாது என்ற ஒப்பந்தத்துபடி,
நான் உங்கள் பாசை வாழ்கை துணைவனாக அடையப்போகிறேன்.
கல்யாணத்திற்கு வரும் படி-
நம் அன்பின் காதலின் மேல் சத்தியம் செய்து அழைக்கிறேன்.
அன்பே வருவாயா?
---தபால்காரன்

காதலியும்பொருளாதரவீழ்சியும்(கவித)

என்னருமை காதலிக்கு,
பெட்ரோல் வெல ஏறிடிச்சு!
தியேட்டர்ல டிக்கெட் வெல ஏறிடுச்சு!
கடல வெல ஏறிடுச்சு,சுண்டல் வெல ஏறிடுச்சு!
கடற்கரை குதிர சவாரி குதிரைக்குமேல போட்டுக்கேக்குறான்.
மிளகா பஜ்சி வெல ஏறிடுச்சு!
சுண்டல் பாக்கி-பீச்சுல தல காட்ட முடியல
பெட்ரோல் வெல குறைஞ்சா!
சுண்டல் காரன் கடன தள்ளு படிப்பன்னுனா!
நம் காதல் தொடர்வோம்-
அதுவரை பொருமைக்காப்போம்.
காத்திருந்தால் உனக்கும், எனக்கும் கல்யாணம்-
இல்லனா நா ஒரு வசதியான பிகருக்கு ரூட்டு வுடுறேன்,
நீ ஏதாவது இளிச்சவாயன் இருந்தா பாரேன்.
------------தபால் காரன்.

சைக்கிள் கிராப்(ஆட்டோகிராப் அல்ல)

அது ஆச்சி கிட்டத்தட்ட 20 வருசம்,அப்ப எனக்கு 14- 15 வயசு.புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா 6 மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.வெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளமாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,ஓ,ஓன்னு சத்தம் போடுவாங்க!பெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்க!தொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்க!ஆஹா!அப்ப தண்ணியெல்லர்மேலயும் தெரிக்கும், நமக்கும்தான் அத இப்ப நினச்சாலும் குளுவுது. தொட்டு விளையாட்டு,கன்னுவிளையாட்டு,சாபுத்திரிப்போட்டு யார் தோக்குறாங்களொ அவங்க கண்ண கட்டிடுவோம்.ரெடி 1,2,3ன்னு சொன்னதும் தண்ணில முக்கிக்குவோம்,யார கரட்ட தொடுரவங்க அவுட் அவங்க கண்ண கட்டனும்.சில பேருக்கு குளு தண்ணின்னா ஆரம்பத்துல உடனே நனய மாட்டாங்க,மெதுவா,ஒவ்வொரு படியா எறங்குவானுவ!அவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனை?)அவன் கண்ண கட்டுவோம். நேரம்போறதே தெரியாது.திடீர்ன்னு ஒருத்தன் நினவூட்டுவான்.என்னாங்கடா ஸ்கூலுக்கு லேட்டாச்சி நான் போறம்பா!வர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார்,பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்க!சிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க!சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்க!அவங்க விளையாட்டுத்தொடரும்.லேட்டா ஸ்கூலுக்கு வந்து ஏதாவது பொய் சொல்லி தப்ப பாப்பாங்க!இல்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குவானுவ!ஸ்கூல் விட்டதும் சாயங்காலம் அவசரமா வீட்லேந்து கிளம்பி புளியாங்கா(புளி-காய்)அடிக்க போவோம்.கைல கிட்டு பில்லு,மொலகா பொடி உப்பு வச்சிருப்போம்.ரோட்டோரமா சைக்கிளை நிறுத்திட்டு மல,மலன்னு நலஞ்சு பேரா ஏறிபரிபானுங்க,கீழே 2 பேரு சைக்கிள் திருட்டுப்போகாம இருக்க காவல் காப்பனுங்க!யாரும் வரங்கலான்னு பாக்க-காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.3 பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க!மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவ!இப்படிபறிச்சத எடுத்துக்கிட்டு,யார் வீட்டு மாடியிலெயாவது கொண்டு போய் பங்கு போடுவோம்.மிளகாபொடி வச்சி,உப்பு வச்சி தின்டா...இப்ப நினச்சாலும் பல்லு கூசுது.இது மாரிதான் மாங்கா பரிக்கிறதும்.இப்படி சைக்கிள்கிராப் நீளும் கை வலிக்கிது
அது நால இதொட நிறுத்துறேன் மன்னிச்சுடுக்க!
--தபால் காரன்.

Sunday, July 20, 2008

பிரதமருக்கு அவசரமா ஒரு யோசனை(கற்பனை).

அவசரமா விஞ்ஞானிகள் கூட்டத்தை ரகசியமா கூட்டுங்க!அவங்ககிட்ட கெஞ்சி கூத்தாடி உங்களபோல ஒரு குளோனிங் செய்ய சொல்லி, நீங்க,அமெரிக்கா இரவோடு,இரவா புறப்பட்டு போய்யிடுங்க.வாக்கெடுப்பு நல்ல விதமா வந்தா திரும்பி வாங்க. இல்லேனா உங்க மகன் வீட்லேயே தங்கிடுங்க.சீக்கிரம் புஸ்சும் ரிடையர் ஆகப்போறார். நல்ல கம்பெனி கிடைக்கும்.உன்னால நான் கெட்டேன்,என்னாலே நீ கெட்டேன்னு பாடி நேரம் போக்கலாம்.இல்லையேனில் இருக்கவே இருக்கிறது,ஏதாவது யுனிவர்சிட்டி அங்கே பாடமெடுக்கலாம் காசுக்கு காசு, நேரம்மும் போகும்.மீதினேரத்துல எப்படி இந்தியா பொருளாதாரத்தை வீனடிசிங்க என்பதை சுயசரிதைன்னு எழுதி அதுலையும் காசுப்பாக்கலாம்.எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.அதுக்கு மேல உங்க இஸ்டம்.ஒரு காள் நீங்க ஜெய்சிட்டிங்கனா உங்க குளோனிங்க தீர்த்து கட்டிடுங்க இல்லாட்டி,எதிர்கட்சியேலே சேர்ந்துடுவார் உங்க குளோனிங். பிறகு கோமாளி சுப்பிரமணிசாமி கேசு-கீசு போடுவார் அப்பவும் பிரச்சனை.... மறுபடியும் இன்னோரு குளோனிங் செய்ய வேண்டி வரும்.கவனம் ,அதெல்லாம் நடக்காம பாத்துக்கிறது உங்க பொருப்பு சொல்றத சொல்லிட்டங்க.
-தபால் காரன்.

ஒரு தபால்காரனின் புலம்பல் (கவிதை)

காதல் கடுதாசி வரும் காலம் மலையேறிப்போச்சி!
காதல் தூதுவன் எனும் பட்டம் மாறிப்போச்சி!
கம்(பி)யூட்டர் வந்த பின்னே-
சைபர் கேப் வந்துடுச்சி!
சைபர் கிரைம்மும் வந்துடிச்சி.
ஒருகாலத்துல,கால் கடுக்க கதவருகே,
காத்திருந்தவங்கயெல்லாம் காணாபோய்ட்டாங்க!
நல்ல சேதி பட்டனத்துல பையனிடமிருந்து வந்தா பணம்,
பொண்னுக்கு குழந்த பெத்த சேதி வந்தா பணம்,
வேலுவுக்கும்,சோமுவுக்கும் வேல ஆர்டர் வந்தா பணம்.
எல்லாம் மாறிப்போச்சு,பொழப்பு நாறிப்போச்சு.
செல்லுப்போனும்,கம்(பி)யூட்டரும் வந்த பின்.
என் உத்யோகப்பொழப்பு எவ்ளோ காலம்?
----தபால்காரன்.

மாத்தியோசிங்க!

ஒரு காலத்துல எப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சோம்முனு நினைக்கிறச்ச வெக்கப்படுறதா,வேதனப்பட்றதானு தெரியல.காலம் மாறிப்போச்சு கனினி காலமாச்சு.அப்ப கிருக்கிகிட்டு எல்லாரிடமும் தூக்கி காட்டிசந்தோசப்பட்டப்ப எழுதுனது.அப்ப பெரும்பாலோனோர் இப்படிதான் எழுதிக்கிட்டு இருந்தாங்க.
ஒரு மேடப்பேச்சாளர்,ரொம்ப கலகலப்பா பேசக்கூடியவர்அவருப்பேரு ஒன்ஸ்மோர் ராமசாமி!எப்படி இந்த பேரு வந்துச்சி,பெற்றவங்கவச்சதா?வேறு யாரும் வச்சதானு பாக்க, நேரமில்லை. ஒரு நாள் ஒரு கல்லூரி பேர்வல் டேக்கு பேச அழைக்கப்பட்டார்.கல்லூரினால மிக அதிகமா குறிப்பு எடுத்துக்கிட்டார். யாரும் கேள்வி கேட்டா விபரீதமா பதில் சொல்லி மாணவர்களிடையேமாட்டிக்க கூடாதுன்னு ஒரு முன் சாக்கிரதை தான். இவர் பேச வந்ததும் ஒரு பாரதி பாடலை பாடி முடித்ததுதான் தாமதம் அதன் பின் விளக்கம் சொல்வதாகத்திட்டம் போட்டு பாடினார் முடித்தும், முடிக்காமலும் மாணவர் கூட்டத்துல ஒரு மாணவன் எழுந்து ஒன்ஸ்மோர் மிஸ்டர் ராமசாமின்னார்.
மருபடியும் உற்சாகமாகப்பாடினார்,திரும்பத்திரும்ப ஒன்ஸ்மோர் கேட்டார்கள் இதுவர 3தடவ பாடியாச்சி ஒன்ஸ்மோர்ன்னு யாராவது கேட்கிற முன்னே நாம முந்தி பிளேட்ட மாத்திடனும் 4 தடவ பாடிக்கிட்டு இருக்கும் போது இவர் பாட்ட நிறுத்திப்புட்டு மாணவர்களைப்பார்த்து சொன்னார்.இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன்னுட்டு என் பேர யாராவது சொன்னா ஒரு பரிசு தருவேன்னு சொன்னார்.உடனே மாணவர்கள் கோரஸாக ஒன்ஸ்மோர் ராமசாமின்னு சொன்னங்க,இவர் மறுபடியும் ஆரம்பித்தார்,இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன் அதுக்கு முன்னாடி என் பேர யார்...... மாணவர்கள் புரிந்து அடங்கிபோனாங்க! இது அவருடைய பக்குவம்,அனுபவம் .
இப்படி யெழுதுன காலம் மாறிடுச்சு. நிறைய எழுத்தாளர்கள் உருவாயிடாங்க! நிறய பிளாக்கர் மத்தியில் மாத்தி யோசிங்க நீடிச்சி நிலைக்கலாம்.
---தபால் காரன்.

கௌடாவும் கவுத்திட்டார்,காங்கிரசுக்கு மேலும் ஒரு'கை'சேதம்.

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை தோற்கடிப்பதற்கான வியூகம் குறித்து 3வது அணி மற்றும் இடது சாரி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், மாயாவதியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமியும் கலந்து கொண்டனர். இதுவரை காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வந்த தேவெ கவுடா, 3வது அணியில் இணைந்துள்ளார்.டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.3வது அணியில் கெளடாஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது., 3வது அணியில் இணைந்துள்ளார்.டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.3வது அணியில் கெளடாஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
----தபால்காரன்.

Saturday, July 19, 2008

தென் ஆப்பிரிக்க காந்தி

நெல்சன் மண்டேலா
தென் ஆப்பிரிக்க காந்தி என்று அழைக்கப்படும் நெல் சன் மண்டேலா 18.7.2008 அன்று 90-வது வயது முடிந்து 91-ஆவது அகவையில் நுழை கிறார். தென் ஆப்பிரிக்க நாட்டில் அவரது பணியை பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன.ஆனால் அவருடைய வாழ்க்கையில் 27 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடினார். அவர் செய்த குற்றம்தான் என்ன? தனது மக்களையும் நாட்டையும் நேசித்ததுதான் குற்றம். எல்லாவற்றையும்விட சுதந்திரத்தை தனது உயிரை விட அதிகமாக நேசித்தார். ஆகவேதான் மற்றவர்கள் போன்று வெளியே நடமாடும் சுதந்திரத்தை இழந்து காராக் கிருகத்தில் அடைக்கப்பட்டு கிடந்தார்.`உன் நிறம் கருப்பு `என் நிறம் வெளுப்பு ஆகவே நான் வசிக்கும் பகுதிகளில் நீ வசிக்கக் கூடாது. `என் பிள் ளைகள் படிக்கும் பள்ளி களில் உன் பிள்ளைகள் படிக்க முடியாது. ஒரே பேருந்தில் போக முடியாது. ஒரே இடத் தில் தேநீர் குடிக்கக் கூடாது! என்று கூறியது நிறவெறி அரசு. இது எங்கோ குடியேறிய இடத்தில் கூறப்பட்டது அல்ல. தங்கள் சொந்த நாட் டில் நடந்த கதை இது. இது எப்போதோ நடந்த ஒரு இருண்ட காலத்துக் கதையும் அல்ல. இருபதாம் நூற்றாண் டின் முடிவில் நடந்த கொடுமை இது. இதை எதிர்த்து போராடிய இயக்கத் தின் தலைவன்தான் நெல்சன் மண்டேலா.இன ஒதுக்கலின் கொடூரம்இன ஒதுக்கலின் கொடூ ரத்தை நம்மால் எண்ணிப் பார்ப்பது கடினம். தென்னாப் பிரிக்கா `குடியரசில் 90 சதவீத நிலம், 50 லட்சம் வெள்ளையர் களுக்குச் சொந்தம். இரண் டரை கோடி மண்ணின் மைந்தர்களுக்கு 10 சதம்தான் மிச்சம். சொந்த நாட்டில் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. தினந்தோறும் 100 கறுப்பினக் குழந்தைகள் பட்டினியால் இறந்தன. வெள் ளையர்களைக் காட்டிலும் கறுப்பினத்தவர்களிடையே சாவு விகிதம் ஆறு மடங்கு அதிகம்.உலகம் முழுவதும் தென் னாப்பிரிக்க அரசின் `அபார்த் தைடு என்னும் நிறவெறிக் கொள்கையை எதிர்த்தும், தென்னாப்பிரிக்க அரசு உலக அபிப்பிராயத்தை துச்ச மெனத் தூக்கி எறிந்த தற்கு பின்னணியில் உள்ள சக்திகள் அமெரிக்க ஏகாதி பத்தியமும், அதன் தவறான நண்பனான அன்றைய பிரிட்டிஷ் பிரத மர் தாட்சரும் தான் காரணம். அதற்கு முக்கிய காரணம் தென் ஆப்பிரிக்க பூமியில் புதைந்து கிடக்கும் கனி வளங்களும் அதனைச் சுரண் டிக் கொழுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தான்.நிறவெறியை எதிர்த்து இயக்கம்நிறவெறிக் கொள்கையை எதிர்த்து முதலில் (1943-ல்) ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய நெல்சன் மண் டேலா பின்னர் வால்டர் சிஸ்லு, ஆலிவர் டாம்போ போன்றவர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கி இன வெறிக்கு எதிரான முன்னணிப் படையாக மாற்றினார்.1950-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு முகாமின் தொண் டர் படையின் முதன்மை தளபதியாக இருந்து இன வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் என்று முதல் கட்ட நடவடிக்கையினை மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து `பாண்டூ கல்வித் திட்டத்தையும் உள்ளே நுழைவதற்கான `அனுமதி சட்டத்தையும் மக்கள் இயக் கம் மூலம் எதிர்த்தார்.1952-இல் சட்டத்தில் பட் டம் பெற்றார்.1955-ல் இனவெறியில்லாத ஜனநாயக தெற்கு ஆப்பிரிக் காவை அமைப்பதற்குரிய முன்னோடித் திட்டமாக விடுதலைக்கான உரிமைப் பத்திரத்தை கிளிப் நகரில் கூடிய மக்கள் கூட்டத்தில் ஏற்றுக் கொண்டனர். தடைச் சட்டம் இருந்த காரணத்தால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியா விட்டாலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மண்டேலா முன்னணியில் இருந்தார்.1960-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21-ஆம் நாள் சார்ப் விலா என்ற இடத்தில் உள்ளே நுழைவதற்கான அனுமதி சட்டத்தை எதிர்த்து அமைதி யான முறையில் கிளர்ச்சி செய்த காரணத்தால் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அரசால் அவசர கால நிலை பிர கடனப்படுத்தப்பட்டு ஆப்பி ரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.மண்டேலா தலைமறைவு வாழ்க்கையில் இயங்கினார். 1962-ஆம் ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் இருந்து வெளிவந்து ஆப்பிரிக்காவில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று பின்னர் விடுதலைக் காக ஆதரவினை தேட அய்ரோப்பா சென்றார். ஆண் டின் இறுதியில் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றதற்காகவும், சட்ட விரோதமான போராட்டத்தை தூண்டி விட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு அய்ந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருக்கும் பொழுது ரிவோ னியா வழக்கில் முதல் எதிரி யாக வழக்கு தொடரப்பட்டு நாச வேலைகட்கு திட்டம் தீட்டினார் என்றும் அரசுக்கு எதிராக கொரில்லா யுத்தத் திற்கு ஆயத்தம் செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு 1964-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக் கப்பட்டது. தென் ஆப்பிரிக் காவில் ஆயுள் தண்டனை என்பது ஒருவரது இயற்கை யான ஆயுள் முடியும் மட்டும் என்பதாகும்.இவரது விடுதலைக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்கம் முழங்கிய முழக்கம்.`மண்டேலாவை விடுதலை செய் என்பதுதான்.அய்க்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள் சபை, அய்ரோப்பியக் குழு, இவை அனைத்தும் அவ ரது விடுதலையைக் கோரிய பேரமைப்புகள். இவை தவிர உலகத் தொழிற்சங்க சம்மே ளனம், மாதர், இளைஞர், ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் அவரது விடுதலையைக் கோரி வந்தன.விடுதலை44 வயதில் சிறைக்குள் சென்ற மண்டேலா தனது 71-ஆவது வயதில் (1990 பிப்ரவரி 11-ஆம் தேதி) விடுதலை செய் யப்பட்டார்.உலக நாடுகள் மண்டேலா சிறையிலிருந்து வெளிவரும் காட்சியைத் தொலைக்காட் சியில் ஒளிபரப்பு செய்து உலக மக்கள் அதைக் காண வைத்தன.சிறை வாயிலை விட்டு வெளியே வந்தபின் பெருந் திரளாகக் கூடியிருந்த மக்களி டையே அவர் கூறுகிறார்:`நான் வெளியே வந்து மக்கள் கூட்டத்துடன் கலந்து எனது வலது கை முட்டியை உயர்த்துகிறேன். கடந்த 27 ஆண்டுகளாக நான் அப்படிச் செய்ய இயலவில்லை. அது எனக்குப் புதிய வலிமையை யும் மகிழ்ச்சியையும் அளித் தது. என் வாழ்க்கை புதிதாக தொடங்கப் போகிறது என உணர்ந்தேன். பத்தாயிரம் நாள்களுக்கு மேற்பட்ட என் சிறைவாசம் இறுதியாக முடிந்து விட்டது என்றார் அவர்.குடியரசுத் தலைவர்1994-இல் சுதந்திரமான தேர்தல் நடைபெற்று தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவ ராக மண்டேலா பொறுப் பேற்றார். 1999-ல் அதிபர் பதவியின் காலம் முடிந்த வுடன் தனது பொறுப்புக் களை ஒப்படைத்தார்.தற்பொழுது தன்னுடைய நேரத்தை தென்னாப்பிரிக்கா வில் எய்ட்ஸ் நோயை எதிர்த்து போரிடுவதில் செலவழிக் கிறார்.இந்திய அரசின் உயர்ந்த விருதான பாரத ரத்னா, நேரு விருது மற்றும் உலக நாடுகளின் பல விருதுகளைப் பெற்றவர் மண்டேலா.மண்டேலாவின் வாழ்க்கை யானது தன்னம்பிக்கை, கொள்கையில் தீவிரப் பற்று, இன்னல்களையும் எதிர்ப்பு களையும் கண்டு அஞ்சாமை, எதிரிகளுடனும் இணக்கத் துடன் நடந்து கொள்வது, மனிதநேயம் ஆகிய குணங் களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
Posted by tamilsangami

முன்னுரையும்,வேண்டுதலும்.

கடுதாசி தயாராச்சு,
நித்தம் இனி பாத்து,படித்திடலாம்!
புடிச்சத படிச்சி மூளையிலே ஏத்திக்குங்க!புடிக்கலனா,கடாசிடாதிங்க-
ஒரு கடுதாசிப்போட்டு கருத்து சொல்லுங்க!
----தபால்காரன்.