Wednesday, July 23, 2008

செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ரொம்ப ஈயப்படும்.

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டம்
கும்பகோணம் அருகே அரசு அங்கீகாரம் பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியினுள் போராட்டக்குழுவினர் மற்றும் மாணவ, மாணவியர் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
அசூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கடந்த ஆண்டு 92 மாணவ, மாணவிகள் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டனர்.
இக்கல்லூரிக்கு தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசு பொதுத்தேர்வை எழுத முடியாமல் 92 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வன்னியர் சங்கம், தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் பெருமன்றம், அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி ஆகியவைகள் இணைந்து கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாணவ, மாணவியர், அரசியல் கட்சியினர் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அக்கல்லூரி உள்ளே உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர்.
இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ராஜசேகர், மாவட்டச் செயலாளர் ரகுநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி குடந்தை அரசன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸôர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.

No comments: