Sunday, July 20, 2008

மாத்தியோசிங்க!

ஒரு காலத்துல எப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சோம்முனு நினைக்கிறச்ச வெக்கப்படுறதா,வேதனப்பட்றதானு தெரியல.காலம் மாறிப்போச்சு கனினி காலமாச்சு.அப்ப கிருக்கிகிட்டு எல்லாரிடமும் தூக்கி காட்டிசந்தோசப்பட்டப்ப எழுதுனது.அப்ப பெரும்பாலோனோர் இப்படிதான் எழுதிக்கிட்டு இருந்தாங்க.
ஒரு மேடப்பேச்சாளர்,ரொம்ப கலகலப்பா பேசக்கூடியவர்அவருப்பேரு ஒன்ஸ்மோர் ராமசாமி!எப்படி இந்த பேரு வந்துச்சி,பெற்றவங்கவச்சதா?வேறு யாரும் வச்சதானு பாக்க, நேரமில்லை. ஒரு நாள் ஒரு கல்லூரி பேர்வல் டேக்கு பேச அழைக்கப்பட்டார்.கல்லூரினால மிக அதிகமா குறிப்பு எடுத்துக்கிட்டார். யாரும் கேள்வி கேட்டா விபரீதமா பதில் சொல்லி மாணவர்களிடையேமாட்டிக்க கூடாதுன்னு ஒரு முன் சாக்கிரதை தான். இவர் பேச வந்ததும் ஒரு பாரதி பாடலை பாடி முடித்ததுதான் தாமதம் அதன் பின் விளக்கம் சொல்வதாகத்திட்டம் போட்டு பாடினார் முடித்தும், முடிக்காமலும் மாணவர் கூட்டத்துல ஒரு மாணவன் எழுந்து ஒன்ஸ்மோர் மிஸ்டர் ராமசாமின்னார்.
மருபடியும் உற்சாகமாகப்பாடினார்,திரும்பத்திரும்ப ஒன்ஸ்மோர் கேட்டார்கள் இதுவர 3தடவ பாடியாச்சி ஒன்ஸ்மோர்ன்னு யாராவது கேட்கிற முன்னே நாம முந்தி பிளேட்ட மாத்திடனும் 4 தடவ பாடிக்கிட்டு இருக்கும் போது இவர் பாட்ட நிறுத்திப்புட்டு மாணவர்களைப்பார்த்து சொன்னார்.இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன்னுட்டு என் பேர யாராவது சொன்னா ஒரு பரிசு தருவேன்னு சொன்னார்.உடனே மாணவர்கள் கோரஸாக ஒன்ஸ்மோர் ராமசாமின்னு சொன்னங்க,இவர் மறுபடியும் ஆரம்பித்தார்,இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன் அதுக்கு முன்னாடி என் பேர யார்...... மாணவர்கள் புரிந்து அடங்கிபோனாங்க! இது அவருடைய பக்குவம்,அனுபவம் .
இப்படி யெழுதுன காலம் மாறிடுச்சு. நிறைய எழுத்தாளர்கள் உருவாயிடாங்க! நிறய பிளாக்கர் மத்தியில் மாத்தி யோசிங்க நீடிச்சி நிலைக்கலாம்.
---தபால் காரன்.

No comments: