Wednesday, July 30, 2008

அவர்களிடம் போய் சொல்வார்யாரோ?(கவிதையாய் ஒரு கதை)

காதலன்:(மனதினுல் கேட்கும் கேள்வி)

கண்ணே!

கணினி வந்திருந்த சில ஆண்டுகளில்..


நான் உன் வீட்டுக்கு உன் அக்காவான என் ஆசிரியையிடம்

கல்வி பயிற்சி பாடம் கற்று வந்த நாள் முதல்..

உன் மேல் காதல் கொண்டதை...

காகிதத்தில் கவிதையென்ற பெயரில் என் காதலை

கிருக்கிவைத்த காகிதத்தை-

உன் வீட்டு தாழ்வாரத்தில் செறுகி வைத்தேன்,

என்றாவது நீ பார்த்து காதலிப்பததை

புரிந்துகொள்வாய்யென்று.

ஏழு ஆண்டுகள் ஆகிய பின்னும் நீ இன்னும் பார்க்க

வில்லையென்பதை உன் வீட்டில் நலம்விசாரிக்க

வந்ததுபோல்,தாழ்வாரத்தை துழாவினேன் -

இன்னும் என் காதலை சுமந்த கடிதம் அங்கே!

அன்பே ! என்று நீ பார்ப்பாய்?

இல்லையாயினும், உன் வீட்டில் யாரானும் பார்த்து

முடிவுஒன்று நேரட்டுமே!

அதுவரை காதல் வேதனையாய் நெஞ்சை குடைகிறதே!

(அதே வேளை காதலியும் மனதுக்குள்..

வீட்டு தாழ்வாரத்தைப்பார்த்த படி நினைவுகளால் கேட்டும் கேள்வி)

நேற்று நீ என் வீடு வந்தாய்!

வண்ணத்துப்பூச்சி என் உள்ளத்தில் பறக்க கண்டேண்.

அன்பே! நீயனக்கு எழுத்திய காதல் கடிதம் படித்து,

நான் என் காதலை பதிலாய் காகிதத்தில் எழுதி

அத்தாழ்வாரத்தில் செறுகி வைத்தேன்!

ஆண்டுகள் ஏழு ஆயின!

நீ நேற்று வந்ததும்,உன் கைகள் தாழ்வாரத்தை வருடியதும்
வாடிய மனம் மகிழ்வு கொண்டது!

பின் நீ அக்கடிதம் எடுத்துப்பாராமல் சென்றதும் என் சுவாசம்

சுருங்கியது என் செய்வேன்?


என்னவனே! நீயெனை இப்பொழுதும் விரும்புகிறாயா

இல்லையா?

(யாரவது அவர்களிடம் போய் அவர்தம் காதலை

சொல்லுங்களேன்)

---தபால் காரன்.




No comments: