Friday, May 14, 2010

வல்லவனுக்கு எல்லாம் ஆயுதம்.

பெய்ஜிங்:அடிப்படை வசதி ஏதும் இல்லாமல், 47 ரோபோக்களை உருவாக்கி, சத்தமில்லாமல் சாதனை புரிந்து வருகிறார், சீன விவசாயி. கையில் கிடைக்கும் பழைய இரும்பு பொருட்கள், ஒயர்கள் போன்ற தட்டுமுட்டு சாமான் களை கொண்டு, இயந்திர மனிதனை உருவாக்கி, சாதனை படைத்து வருகிறார்.பீஜிங் அருகே உள்ள மாவூ என்ற கிராமத்தை சேர்ந்தவர் வு யூலு(49).

துவக்க கல்வி வரை மட்டுமே படித்த, வு யூலு தற் போது சீன மீடியாக்களின் ஹீரோவாக மாறியுள்ளார். 'டிவி'க்களிலும், பத்திரிகைகளிலும் வு யூலுவின் பேட்டிகள், கண்டுபிடிப்புகள் பற்றிய நிகழ்ச்சிகள், செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அள வுக்கு, யூலு பிரபலமாகி விட்டார்.இந்த மாதம் துவங்கி, வரும் அக்., வரை நடக்க உள்ள ஷாங் காய் சர்வதேச பொருட் கண்காட்சியில் யூலுவின் கண்டுபிடிப்புகள் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து யூலு கூறியதாவது:என் பெயர், தற்போது தான் சிறிது பிரபலமாகி வருகிறது. ஆனால், 20 ஆண்டுகளாக இதுபோன்ற படைப்புகளை உருவாக்கி வருகிறேன்.சர்வதேச கண்காட்சியில் இடம் பெறும் எனது கண்டுபிடிப்புகளுக்கு, அனைவரிடமும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். விவசாயிகளின் பிரதிநிதியாக நான் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்.

எனது படைப்புகளுக்கு அதிக தொகை செலவிட்டதால், குடும் பத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டது.ரோபோ உருவாக்கும் முயற் சியை, 1986ம் ஆண்டு தொடங்கினேன். என் செயல்களால், குடும் பத்தினர் எரிச்சல் அடைந்தனர்.விவசாயத்தில் வரும் வருமானம் முழுவதையும், ரோபோ தயாரிப்பதற்கே செலவிட்டேன். ஒரு கட்டத்தில் என் மனைவி, விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டினாள்.

விவசாய குடும்பத்தில் பிறந்த நான் விவசாயத்தை எளிமையாக்க சில கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கினேன். என் சைக்கிளை விதை விதைக்கும் இயந்திரமாக மாற்றினேன்.மனிதர்களுக்கு பயன்படும் வகையில், ரோபோக்களை உருவாக்கி வருகிறேன். மட்டன் கறி வெட்டும் ரோபோவை, தற்போது உருவாக்கி வருகிறேன்.

என் படைப்புகள், ஏற்கனவே, ஜப்பான், கொரியா மற்றும் ஹாங் காங்கில் நடந்த கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.வாய்ப்பு கிடைத்தால் விரைவில் இங்கிலாந்து செல்ல உள் ளேன்.ஆர்வத்துடன் சொல்கிறார், இந்த படிக்காத மேதை யூலு