Saturday, August 16, 2008

தங்கம் வென்ற கருப்புத்தங்கம்.

(10,000 மீட்டர் தூரத்தை கடந்து ஒலிம்பிக்ஸ்சில் தங்க பதக்கம் பெற்ற கருப்புத்தங்கம் எத்தியோப்பியசகோதரிக்கு இந்த கவிதை)
ஓட்டம் மற்றவர்களுக்கு விளையாட்டு!
உனக்கோ அதுவோ வயிற்றுப்பிழைப்பு!
நீயோ ஓடி ஓடி ஓடாய் போனவள் -
உன் குடும்பம் நிழலில் தங்க!
ஓட்டத்திற்கு ஊட்ட சத்துணவு தேவை மற்றவர்களுக்கு !
நீயோ ஒரு வேளை உணவிற்கே ஓடிக்கொண்டிருப்பவள்.
பலர் தங்கத்துக்கு ஓடுகிறார்கள்.
நீயோ உன் குடும்பம் நடக்க ஓடுகிறாய்.
நீ பெற்ற தங்க பதக்கம் தாங்கும் சக்தியுண்டா உன் கழுத்திற்கு?.
தங்க மலரே-
இனி நீ யென்றும் சரித்திரத்தில் வாழ்வாய்.
-----தபால்காரன்.

Friday, August 15, 2008

முரண்பாடு

ஒழுக்கம் உயர்வானது,
உயிரைவிட மேலானது
ஆசிரியர் குறளுக்கு விளக்கம் தந்தார்..
பின்ஒரு மாணாக்கனை நோக்கிச் சொன்னார்-
போய் பெட்டி கடையில் என் பேரச்சொல்லி,
சிகரெட் பாக்கெட் ஒண்ணு வாங்கிவா!
இங்கே அவ் வொழுக்கம் தீவைத்து கொழுத்தப்பட்டது ஆசிரியனால்.
---தபால்காரன்

சுதந்திர தேசமா இந்தியா?

நேற்று என் பிள்ளையின் பள்ளியில்,
சுதந்திர கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்,
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்...
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகளை கண்ட பின்,
என் மனம் சிந்தித்தது....
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய் ஒரு சிறுவன்னுக்கேனும் தந்தால்?
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே?
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை-
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆழ்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----தபால்காரன்.

Thursday, August 14, 2008

மீண்டும் சில ஹைகூக்களின் ஊர்வலம்

1சொடுக்கு-விரலின் சோம்பல் முறிப்பு முனங்கல்.
2ஓடும் ஆறு-எவ்வளவு ஓடினாலும் தாகம் பேறாத வீரன்.
3மரம்-வெயிலுக்கு நிழலில் ஒதுங்காத உயிர்.
4பறக்கும் பட்டம்-படித்தவனையும்,பாமரனையும் அன்னார்ந்து பார்கவைக்கும் காகிதப் பறவை.
5குடை- நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்னாடக அரசு.
----தபால்காரன்.

மூத்த குடிமக-(சனாதிபதி)!

ஆண்டான்டு காலமெல்லாம்,
மூத்த குடியாய்!
ஆண்மகன் ஆண்ட காலமெல்லாம்,
ஏதெனும் நல் மாற்றம் வரும்மென்றுகாத்திருந்து...
காத்திருந்து...
காலமெல்லாம்போன பின்னே,
நீ மூத்த குடிமகளானாய்!
பொருப்புகளை புரிந்துகொண்டு,
நாட்டிற்கு விளக்கேற்றுவாய் என உறுதியாய் நம்பிருந்தோம்.!
முன்சென்றவர்கள் போல் நீங்களும்,
வெரும் கை பொம்மைதானே?
இந்த மூத்த குடி மக(ன்) பதவி!
இனி இந்தியாவில் தேவைதானா?
----------தபால் காரன்

டாலர் கணவும் ஆகஸ்ட்15ம்!

(அன்னிய தேசத்தில் ஒரு சகோதரரின் கண்ணீர் மடல்)
ஓட்டமும் நடையுமாக,
வேகமும் விறுவிறுப்புமாக!
தூக்கத்தை மிச்சம் வைத்து.
முதல் நாள் தூக்கத்தை மறுநாள் தொடரும் கண்கள்!
குளிரை மறைக்க ஒல்லி உடம்பை குண்டாக்கும் சாகசம்!
ஒரு நாள்-ஒரு வேலை உணவு!
மூன்று மிடர் தேணீர் விழுங்கள்!
கூட்ட நெருசலில் பஸ்ஸிலோ இரைலிலோ-
மாறி மாறி செல்லும் அவஸ்தை!
அப்பாடா...வந்து விட்டோம் வேலைக்கு...!
என பெருமூச்சு விடும் கணத்தில்...
சம்ளத்தை கூட்டியோ அல்லது -
முன் சம்பளத்தையோ கேட்டு விடக்கூடாது என்பதற்காக,
திட்டிதீர்க்கும் முதலாளி,சூப்பர் வைசர்!
இன்னும் யாருக்கொள்ளாம் பயப்படக்கூடாது என்ற வெவஸ்த்தையே இல்லாமல்
"இவன் அவனா இருப்பானோ?" என்ற திகில்!
வேலை முடித்து நொந்து நூலாகி...
நடமாடும் பிணமாக அறை வந்து சேர்ந்து-
மறுநாள் விழிப்பதற்காக உறங்கி....
அப்பப்பா.....!சொல்லி முடியாது!
சம்பளமோ வரி-இன்ஸுரன்ஸ் என்று எடுத்துக்கொண்டு தருகையில்...
என் நாட்டின் சுதந்திரத்திற்காக ,
எம் முன்னோர்விட்ட குருதியும்,
மூச்சும் வீணாய் போய்விட்டதே...!
என்கிற நினைப்பைத்தவிர வேரொன்றும் செய்வதற்கில்லை....!
Written by:abu zulaiha,
www.adirai post.blogspot.com

Wednesday, August 13, 2008

அமெரிக்கா விரைகிறார் மன் மோகன் சிங் (சும்மா ஒரு விளையாட்டுக்கு)

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் மட்டுமே கிடைத்ததால் எதிரி(எதிர்)கட்சிகள் மன் மோகன் சிங்கை ஆட்சியை விட்டு இறங்கும் படி கோரி,நாடு முழுதும் பந்தில் ஈடுபட்டது.அனைவரும் மாயாவதியின் தலைமையில் மன் மோகன் சிங் வீட்டை முற்றுகையிடப் போவதாக,காரத்தெரிவித்தார்.இதில் தமிழ் நாட்டிலிருந்து சரத்குமாரும் அவருடைய ஒரே நம்பிக்கைத்தொண்டர் ராதிகா சரத்குமாரும் கலந்து கொளாவார்கள் என மக்கள் சமத்துவ கட்சி அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.பா.ஜ தலைவரில் முக்கியமானவரும் வருங்கால பிரதம வேட்பாளருமானஅத்வானி . இது இந்தியாவிற்கே அவமானமாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் அனு ஒப்பந்தம் போடும் போதே அமெரிக்கா வாங்கும் பதக்கத்தில்40% வீதம் இந்தியாவுக்கும் தரனும்னும் கேட்டிருப்போம் .அதற்கு அவர்க ள் ஒத்து வரலேன்னாலும் கால்ல விழுந்தாவது சம்மதிக்க வைத்திருப்போம்.இப்ப நாங்க கேட்பது பிரதமர் உடனடியாக அமெரிக்கா போய் தங்க பறிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்துப்போட்டு வந்தால் தான் பாராளு மன்றத்தை நடத்த விடுவோம்.அவ்வாறு இல்லையென்றால் நாளை மாயாவதி தலைமையில் மன் மோகன் வீட்டை முற்றுகை விடுவோம்.(அப்ப கூடி யிருந்த செய்தியாளரில் ஒருவர்)மாயாவதி உங்க அரசியல் எதிரி எப்படி அவருடைய தலைமையில் போராட ஒத்துக்கொண்டீர்கள்?இது மட்டும் தான் உங்களுக்குத்தெரியும்!மாயாவதிக்கு துணி துவைப்பது,சமையல் பண்ணுவதெல்லாம் இப்ப நான் தான். நாளை கூட மறியல் நடந்தால் மாயாவதிக்கு குடை பிடிக்கிறதுதான் என் வேலை.இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியம்? நான் அடுத்த பிரதமரா ஆகனும்ல!அப்ப மாயாவதி எப்படியும் நான் தான் அடுத்த பிரதமர்ன்னு சொல்றாரே?(எதுக்கு வம்புன்னு அத்வானி வேகமா காருக்குள் நுழைந்து கதவ மூட கார் வேகமா போ கிறது!(மாயாவதி வீட்டுக்கு?) அடுத்து செய்தியாளர்களெல்லாம் மன் மோகன் வீட்டுக்கு ப்போனா அவரு அங்கில்ல சோனியாவ சந்திக்க போய் உள்ளதா சொல்லப்பட உடனே செய்தியாளர்கள் சோனியா வீட்ட அடைகிறார்கள்.பிரதமர் அவசரமா அங்க கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சொல்றார் பிளீஸ் நோ கொஸ்டின்ஸ் டைமில்லசட்டை ,கோட் சூட்டெல்லாம் மடிச்சி வைக்கனும் அவசரமா அமெரிக்கா புறப்படுறேன்.மக்கள் உணர்வ மதிச்சி சோனியா இந்த முடிவ எடுத்திருக்காங்க இதனால நம் நாட்டுக்கு பெரும் புகழ் தேடி வரப்போகுது,எல்லாரும் இந்த ஒப்பந்தம் பாஸாகனும் கடவுள வேண்டுக்குங்க (சொல்லிவிட்டு விறுவிறுன்னு சோனியா வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார்??? ).
----தபால் காரன்.

Tuesday, August 12, 2008

கட்சத்தீவு

கட்சத்தீவு,
சாவை ருசி பார்க்கும் நாவு!
தினமும் மனித உயிரின் காவு.
அன்று இட்ட தானம்-
இன்றொ நமக்கே ஈனம்.
எல்லைகள் பறி மாற்றம்,
இன்றோ எல்லையில்லாத் தொல்லை.
நம்மவருக்கு அங்கே உரிமை இல்லை .
நித்தம்,சகோதரர்களின் ரத்தம் கலந்து-
செங்கடலாய்...
என்று ஓயும் சோக அலை!என்று வீசும் நல் மென் காற்று!
என்று ஓடும் வாழ்கை ஓடம்.
காலம் பதில் சொல்லுமா?
இல்லை கவலை தொடருமா?
---தபால் காரன்

Monday, August 11, 2008

வாக்காளர் அடையாள அட்டை.

பொதுமக்களின் இரத்தம் உறிஞ்சும் அட்டை.
எமாளிகளுக்கு ஏமாற்றுபவன் தரும் சிறப்பு முத்திரை.
(வாக்கு)உரிமைதந்து உரிமை பறிக்க ஒரு நுழைவுச் சீட்டு.
அறிவிக்கபடாத அடிமைச் சின்னம்.
வெற்றி கயவனுக்கு,தோல்வி நல்லவனுக்கு.
---தபால் காரன்.

Sunday, August 10, 2008

இரவு வடிந்த பின்...

இரவு வடிந்த பின்..
விடியல் படை யெடுக்கும்,
உலகம் விழித்தெழும்.
ஒவ்வொறு இருளும் இறந்து,
வெளிச்ச குழந்தை-
உலகின் மடியில் தவழும்.
இவையாவும் நடக்கும் இயல்புகள்தான்.
ஆனாலும்-ஒவ்வொரு இரவிலும் எழும் சந்தேகம்.
நாளை நாம் இருப்போமா?
நம்பிகை நம்பிகைத்தர,
ஒவ்வொரு இரவும் கழிகிறது.
---தபால் காரன்.

வெக்கத்தால் செய்த முகம்.

நான் மணமுடித மங்கைகக்கு- தங்கைஒருத்தியுண்டு.
அவள்தவழும் பிராயத்திலிருந்து,
வெக்கத்தை ஆடையாய் உடுத்தி,
யார் நோக்கினும்-
முகத்தை கையில் பொத்தி,
தவழும் பொழுதில்... பின்னரும்.
பால் வடியும் அவள் முகத்தை-
பார்தவர் சிலரெ!
அதில் அவள் தாய்,தந்தையும் கூட குறைவாய்....
எதற்கும் வெட்கபடும் அவளின்
வெட்கம்மேற்படுத்தும் திருமண -
புகைப்படத்தையேனும் முழுசா பார்த்திடனும்.
திருமண நாளில்,
யாருக்கெனும் புகைபடமெடுக்க,
அவள் சம்மதித்தால்.
---தபால் காரன்.

என் பேனாவிலிருந்து...

ஏ பெண்ணே!
நேற்று இரவில் நானும்,நீயும் கனாவில்சந்தித்து,
பின் தித்தித்தவைகள்.
இன்று,இப்பொழுது,
கைகூடி இருக்கும்,திகட்டாத தித்திப்பும்,
நாளை,தமிழ் சங்கமியில்-
தமிழர்களோடு சங்கமிக்கவிருப்பதும்.
இதுபோல் என்றும் தித்திக்கும் என்பது,
நம் உயிர் காதல் போல் திண்ணம்.
----தபால் காரன்.

இளமை கால காதல் கவிதை

ஏ நிலவே!
உன் முகத்திற்கு,
முக்காடு இட்டுக்கொள்.
என்னவள் இவ் உலகில் இருக்கும் வரை,
உனக்கு ஓய்வு நாட்கள்.
-தபால் காரன்.

காதல் கடுதாசி!

எத்தனையோ சுவாசம்-
என் நுரையீரலில் பறிமாறப்பட்டாலும்.
அத்தனைக்கும் அப்பால்-
உன்கடிதவாசகமில்லாவிட்டால்-
தீ பிடிக்கும் என் இதயத்தை-
உன்பழய கடித மின்னஞ்சல்,
தண்ணீர் ஊற்றி சரி செய்யும்.
---தபால் காரன்.

அம்மாடி இந்த உலகம்

அறிவிலி சீமானெனில் -
தலைமேல் தூக்கி கூத்தாடும் கூட்டம்.
அறிவுடையோன் ஏழையெனில்-
காலில் போட்டுகதகளி நடனமாடும் வர்க்கம்.
செயல் வீரன் சில சமயத்தில் தோற்றால்-
வீனன்,மூடன் என்றும்.
வெண் சாந்து, வெல்லாவி வேட்டிகட்டி,
வலம் வருகையை-
வாயார புகழ் துதித்தும்-
வேடிக்கை காட்டும் கூட்டத்தின் காலமிது.
அம்மாடி இந்த வேடம் தரித்த உலகில் -
வியக்கதகு விசயம்மெல்லம் பழிச்சொல்பெரும்.
--தபால் காரன்.

Friday, August 8, 2008

எதார்த்தம்

நெருப்பு கணத்தில்...
நிர்பந்ததில் எழுதிய கவிதையெல்லாம்-
பின் என் மனதையும்,மேனியை சில்லிடச் செய்தவை அதிகம்.
பொருமையாய்...கணங்களை விழுங்கி,
சிந்தித்து தீட்டிய பல கவிதை...
என்னை சோதிப்பதும்,சோர்வு கொள்ள செய்வதும் உண்டு.
எழுதுவதற்காக மட்டுமன்று வாசிக்கப்படவும்,
நேசிக்கப்படவும் வரம் வேண்டும்.
---தபால் காரன்.

இதயமும், நீயும் ஒன்றே

அன்பே!
நீ ஓயாமல் உழைத்துகொண்டிருக்கிறாய்!
நானுறங்கினாலும்,
என்னுடனே இருந்தும் நீ உறங்கவில்லை!
அதனால் தான் உன்னை இதயம் என்கிறேன்!
அது உறங்கினால் நானிறப்பேன்.
நீ இயங்கவில்லையென்றாலும் நானிறப்பேன்!
ஆக, இதயமும், நீயும் ஒன்றே!
---தபால் காரன்.

ஹைடெக்(கலி)காலம்.

ஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.
அரையில் பாதி கால் அளவே இன்று ஆடையானது.
ஒரு ஆனைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,
பல ஆனைச்சேர்ந்தால் நட்பு ஆனது.
படிக்காத காலத்தில் இல்லாத பினியெல்லாம்.
மெத்த படித்த பின் மேலும் கூடி புதிது,புதிதாய் தோன்றலானது.
ஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.
காண்ட்டீர் அக்காலம்.
ஆட வரும்(டிஸ்கோதே)அனைவருமே நன்பர்கள்.
அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன்,காதலி..
ஹைடெக்(கலி)காலம்.
ஆனும் பெண்னாய் மாறிடமுடியும்.
பெண்ணு ம் ஆனாய் மாறிட முடியும்.
விஞ்ஞானத்தின் விபரீத வளர்ச்சி-
காலத்தின் நாகரீக சிதைவு.
----(crown)தபால் காரன்.
(Mohamed thasthageer)

எந்தன் இனிய வீதி













எத்தனை வீதிகள் நான் கண்டதும்,
கடந்ததும்,கேள்விப்பட்டதும்...
வரை படத்தில் பார்த்ததும்,வண்ணப்புகைபடத்தில் பார்த்ததும்.
தொலைக்காட்சி வழிப் பார்த்ததும்.
பல் வகை வீதிகள்....
ஓரே மயான அமைதியாய் சில...
மரன ஓலமாய் சில...
கூட்டம்,கூட்டமாய் கூடவே மவுனமாய்..
கேளிக்கையாய் கூட்டத்துடன் சில...
மழைப்பொழிவாய்...
சிலப்பனிப்பொழிவாய்..
இன்ன பிற ,சுட்டெரிக்கும் சூரிய விளக்கில்.
பகட்டாய் சில, அலங்கோலாமாய் பல..
இப்படி நான் பார்த்த,அறிந்த,நடந்த வீதிகளில்,
என்னை முதலில் சுமந்த...என் பிஞ்சு பாதம் பதிந்த...
என் அன்னையும்,தந்தையும்,
என் உறவுகளும்,சுற்றமும் -
தினம் நடக்கும் என் பால்ய வீதி!
பல நேரம் துற் நாற்றமும்,
அலங் கோலமாய் இருப்பினும்,
நான் எங்கு சென்றாலும்,என்னைதொடருகிறது.
---தபால் காரன்

பத்திரிக்கை (அ)தர்மம்!

பத்தி,பத்தியாய் நடப்புகளை திரித்து செய்தி யென்று,
அதர்மம்,வண்மம்,காழ்புணர்சி,
வேண்டாதவரை சாடல்,
வேண்டியவரின் கூடல்!
கற்பனை சரக்கை,
விற்பனைகுதிரையில் ஏற்றி,
உலகமெலாம் வலம் வர செய்(தி)து,
கடிவாளம் கையில் பிடித்து
பிழை செய்யும் இக்காலப்பத்திரிக்கை.
வர்தக காற்றில் காலத்தே
தூற்றி கொள்ளும் இந்த நரிதந்திரகூட்டத்திற்கு
விசிறியாய் வாசகனாய்,
வேர்க்க,வேர்க்க செய்தீ படித்து பின்-
அதன் அதனை நம்பிடும் வேடிக்கை கூட்டம் வாடிகையாய்-
இருக்க கானும் பொழுதினில்.....
சுயபுத்தி நானமுற,சுயமரியாதை சுடுகிறதே!.
எனக்குள்ளே எழுந்த சினம் தீப்பிழம்பாய்....
என்று எம் மக்களுக்கும் எழும்?-
அன்றே தீய பல பத்திரிக்கை தீயிட்டு கொழுத்தபடும்.
பின் வரும் காலங்களில்
நல்ல பல பத்திரிக்கை தோன்றி-
திசையெங்கும் எட்டும் - நல் செய்தி.
------தபால் காரன்.

இன்றும் உயிருடன் இறந்தகாலம்

வண்ணமில்லா அன்னாள் புகைப்படம்!
சிரித்த முகத்துடன் எண்ணம் கவர,
நினைவு பின்னோக்கி கொக்கிப்போட!
வறுமை நெடியிலும் சின்ன வசந்தம் வீசிய தருணம்!
அன்று அடுத்த வேளை உணவு பகல் கணவு!
பசிதரும் மெல்லிய கிள்ளல்!
கூரை ஓட்டையின் வழி வந்து விழும் நிலாவின் எச்சில்!
காலம் இழுத்து வந்து வசதி தந்தாலும்,
ஒவ்வொரு நிமிடமும்....
வசதி காற்றின் குளிரிலும்- மேனி வேர்கிறது.
இன்றோ சுற்றமே போலியாய் ...
நிகழ்காலம்- வெப்பம் வீசும் காற்றாடியாய்!
வண்ண புகைப்படத்தில் கூட,
ஒப்பனை சிரிப்பை ஒட்ட வைக்கும் நிக(ழ)ல்(கோ)காலம்.
---தபால் காரன்

Thursday, August 7, 2008

மெய்யெனும் போர்வைக்குள்

மெய்யெனும் போர்வைக்குள்
பொய்யப்பர்கள் நடமாட காணீர்!
நெஞ்சினை நிமிர்த்தி! நெஞ்சுரம் கொண்டு,
படைதவனுக்கே அஞ்சி மற்றவர் முன்னின்று...
தீயவர்முகத்தில் காறி உமிழும் என்னை பொய்யரெனும்,
பொய்யாய் மூடிப்போட்ட,
மெய்யப்பன் யென தன்னை அழைக்கும்-
அந்த பொய்யர்கள் ஒரு நாள்,
படைத்தவனால் அடையாளம் கானப்படும் நாளில்,
பெய்யென பெய்யும் மழை!
---தபால் காரன்

மீன் கொத்தி பறவை நான்

வாய்புக்காக வட்டம் அடிக்கும் மீன் கொத்திப் பறவையாய்,
குளம்(அலுவலகம்) தோறும்....
வட்டமடித்து வலம் வந்தும்...
சிபாரிசு வலை வீசி, மீன் பிடிக்கும் வேட்டைகாரன் முன்...
தோற்றாலும்,மீண்டும்,மீண்டும் -
மீன் வேட்டையில் சோர்வடையாமல்...
வரும்மீனுக்காய்,கருவாடாய்காயும் மீன்கொத்தி நான்!.
---தபால் காரன்

ராமர் என்றாலே பாலமா?பாவமா?

பாலத்தில் விரிசல் வந்தால்சரி செய்யலாம்.
பாலத்தால் விரிசல் வந்தால்?
உறவிற்கு பாலம் கேட்டால்-
உறவுகள் பிரிக்கப்படுகிறது
நாட்டை இணைப்பதற்கு பதில்
நாட்டில் இதயங்கள் இடிக்கபடுகிறது.
பாபர் பள்ளிதான் இடிதீரெ-
சில பாவம் போக்க ராமர் பாலமாவது கட்டவிடுங்களே.
----தபால் காரன்

கைம் பெண்

குற்றமேசெய்யாமல்,காலத்தின் முழு ஆயுள் கைதி.
இறந்தவனுக்காக செத்து,செத்து வாழ்பவள்.
வண்ணம் இழந்த வெள்ளை மலர்.
இதயத்தில் முள்தாங்கிய வெள்ளை ரோசா.
கால் கட்டு(திருமணம்) அவிழ்ந்தும் சுதந்திரமாய் நடக்க முடியாதவள்.
இன்பத்தின் தூற்றல்.
சோகத்தின் வறட்டு சிரிப்பு.
கணவுகளின் பெரும் மூச்சு.
நிசத்தின் ஏக்கம்.
மகிழ்சியின் துக்கம்!
வாழ்வின் சாபம்.
ஆரோக்கியத்தின் முடம்.
அவசியத்தின் புறக்கனிப்பு.
தேவையின் பற்றாக்குறை
என்று தீறும் இந்த கொடுமைகள்?
அன்றே-
மாதம் மும்மாரி பொழியும்.
---தபால் காரன்

கவலைக்கு எத்தனை விரல்கள்

கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.
ஆனால் ,கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?
கவலையில்லாமல் நடக்கமுடியுமா?
வாழ்வின் தூரம் கடக்க முடியுமா?
நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால்...
கவலையா இருக்குது கவலைய நினச்சு!
--தபால் காரன்

காலம் மாறிடுச்சு கணிணி காலமாச்சு

நல்லா தலைவலி,
பொட்டெல்லாம் தெரிக்குது.
ஆபிஸூல பிராஜெக்ட் கழுதளவு!
லீவுபொபோட முடியாது.
இன்னும் தூங்கல பொழுதுவிடிஞ்சிருமெ!
டாட்டரை கின்டெர்கார்டெனில் போய்விடனும்.
அவள் அடுத்த ரூமில அசந்து தூங்குறா!
பிள்ளைய காலைலெ ஸ்கூலுக்கு விடச்சொன்னா-
இங்லீசுல காச்,மூச்னு கத்துவா!
ஐயம் ஆல்சோ வொர்க்கிங் ஐயம் நாட் ப்ரீ-
ஐ ஹவ் டு டூ லாட் ஆப் வொர்க் ரைட்னு கத்துவாள்!
என்ன செய்ய எல்லாம் தலைவிதி!
டைலனால் ரெண்டு போடுவோமா?
(மனதினில் மவுனமாய் சிந்தனை-
சட்டென்று பொட்டில் உதிதத்தது அம்மாவின் யோசனை).
இந்னேரம் அம்மாவ இருந்தா பச்சிலை பத்து போட்டு நெற்றியில் நீவிவிடிருப்பாள்.
போனதீபாவளிக்கு பத்து நிமிடம் பேசியது.
அம்மாவிடம் உடனே பேசினான்.
அவள் கனிவு,விசாரனை......அம்மானா,அம்மாதான்-
அம்மான்னாஅன்புதான்.
தலைவலி சற்று நீங்கியதை உணர்ந்தவனாக,
(மறுபடியும் உறங்க சென்று நன்று உறங்கிபோனான்- பொறியில் மாட்டிய கணினிபொறியாளன்).
---தபால் காரன்

இனி ஒரு விதி செய்வோம்

ஆத்தா தவறிட்டா!
அய்யப்பனுக்கு காதுகுத்து!
டூரிங் டாக்ஸீயிலெ புதுபடம்!பலான,பலான இத்தியாதிகள்!
(எத்தன வித தகவல் ,பேச்சு,காட்டு கத்தல்)
எப்படா ஒளியும் இந்த செல்லு போனு?
இனி எம் மவன் காலதிலேயாவது இத ஒளிக்க விதி செய்வோம்!
விஞ்சான ராசாகளா ஏதாவது செய்யுங்களே.
அளவுக்கு மிஞ்சினா அமுதமும் விசதாங்கோ!
விஞ்சான வீரிய வளர்ச்சி இப்ப காதுகுள்ள ஓனான்.
------தபால் காரன்

ஒரு கிராமத்தானின் புலம்பல்

கந்துக்கு வட்டி தறான்
மாதமானதும்களுத்துளே கைய வைய்கான்!
எதனமுற கட்டினாலும்-
எல நடிகை வயச போல, அதே தொக சொல்லுதான்!
காலமெல்லாம் ஒலச்சிஓடா போனலும்!
ஆஸ்தியெல்லாம்(ஓல குடிசையும்,ஓட்ட ஒடிசலுந்தான்)
கரஞ்சாலும் இவன் தொந்தரவு நிக்காதெ!
நா மறஞ்ச பின்னாடி எம்மவன நினச்சாதான் பாவமாயீக்குது.
---தபால் காரன்

ஆசிரி(றி)யன்

சீரிய பணி ஆசிரியர் பணி!
கற்றவரே காமுறுவர்!
சில கற்றவர் காமமுறும் அவலம்.
பள்ளி பாடம் சொல்லிக்கொடுவென்றால்,
பள்ளியறை பாடம் சொல்லும் காமுகனாய்.
கல்வி முறையைகலவி முறையாக்கும் கயவனாய்!
சாதி,மதம் பதிவுசெய்து கல்வியில் இடம் கொடுத்தாய்!
பின் பால்ய பெண்சாதிபிள்ளைகளை,
உன் பெண்சாதியாய் ஏன்டா பாவித்தாய்.?
மகரந்தச் சேர்க்கை பாடம் செல்லாமல்-
அந்த மலர்(தளிர்)களுடன் சேர்க்கை செய்தாய்.
மாணக்கர் தவறு செய்தால் இருக்கையின் மேல் ஏற்றி தண்டனை தருவாய்!
உன் தவறுகளை தண்டிக்க உன்னை தூக்கு மரம் ஏற்றலாமே?
நீ வாழ்கைப் புத்தகத்தில்அச்சுப்பிழை,
பிழைத்திருத்திகொள்,இல்லையெனில் திருத்தப்படுவாய்.
-----தபால் காரன்.

குறுக்கீடுகள்

ஆரம்பபள்ளி காலதில்,
ஏதேனும் பேசினால் இருக்கையின் மேல் ஏற்றிடும் ஆசிரியை!
விளையாடும் பொழுதினில்,
விகடமாய் பேசினால் நண்பர்கள் சொன்ன அருவை வாயமூடு!
பணி இடத்தில்...
பணியினூடேபேசிய பொழுதினில் உடன் பணி புரிந்தவர்கள் சொன்ன-
சும்மா தொன தொனதொனக்காத!
குடும்பத்தில் முக்கிய முடிவு எடுக்கயில்...
மூத்தவங்க இருக்கும் போது ,
முந்திரி கொட்டையாட்டம் பேசாதீங்க உங்க வாய தைக்கனும்!
-தடுத்துச் சொன்ன இல்லத்தரசி!
இத்தனை குறுக்கீடுகளினூடே,
நான் மனதில் பேசும் மவுனமொழியை,
யாராலும் தடுக்க முடியலெ என்ற ஆனந்தம் என்றும்,எப்பொழுதும்.
--தபால் காரன்.

ஹைகூகள்

1.என்னுடனே தொடர்ந்து வந்தது
எங்கே சென்றது? -இளமை.
2.குளிரிலும் வேர்க்கிறது!!-குளிர் பான பாட்டில்.
3.இருவரியாய் நீயும், நானும் -பொருள் பொதிந்த இன்ப ஹைகூ.
4.மன கூட்டில் ஆயிரம் ஆசைகள்,ஒவ்வொன்றாய் தலை காட்டும்-ஆமைபோல்.
5.இரவினில் கலந்து,பகலில் வெளிப்படும் தோழி- நிழல்.
6.அவள் மறதி போன்றவள்!! என்றும் மறக்க முடியாததால்.
7.வளைந்து ஓடிடும் ஆறு-இளைபாறினால் அது குட்டை.
8.ரகசியத்தை,பகீரங்க படுதியது-தொலைந்து போன காதல் கடிதம்.
9.அழியாத கிருக்கல் என் கைகளிலே-ரேகை.
10.ஆண்டுகளாய் கூடவே இருந்து பின் காட்டி கொடுத்த துரோகி-நாள் குறிப்பேடு.
11.எனக்கு நானே வலை விரித்தேன் -இரவில் கொசுத்தொல்லை
--தபால் காரன்.

Wednesday, August 6, 2008

விதியே முடிவெழுதும்

மயிரை வழித்தெடுத்து,
மொட்டைத் தலையில்...
உன் பெயர் எழுதி வலம் வந்தேன்!
எழுதியவை நீரில் எழுதி கரைவதுபோல்,
காலம் கரைத்தது.
பின் என் தலையினுள் இருந்த தலையெழுத்து!
நீ வேரொருத்தனுக்கு கழுத்தை நீட்ட சாட்சி கையெழுத்துப்போட்டது.

Monday, August 4, 2008

பாட்டியும் அவள் சொன்ன கதைகளும்.

நேற்று நண்பர்களுடன் குசாலம் படம் பார்த்தேன் !
கதை? ஆ... ஊ... சூப்பர்! யென்றனர்...
பரவாயில்லை ரகமே!.
சென்ற மாதம் தசாஅவதாரம் கதையில்லை நல்ல கலை நேர்த்தி!
தி டார்க் நைட் ஆங்கிலப்படம்-பிரம்மாண்ட பொழுது போக்கு!
ஹாரிப்பாட்டர் நம்ப முடியாத சாகாச சித்திரம்.
பல மொழிப்படம் ,பல நாட்டுப்படம் -
பார்த்ததும்,படித்ததும்,கதை கேட்டதும்...
இன்னும் என் ஜீவனில் ஓடிக்கொண்டிருக்கும்...
அதீத கற்பனை யற்ற !திரை வடிவம்,எழுத்துவடிவம் பெறாத..
காலம் கடந்தும்,கண் கொட்ட இரவில் விழித்திருக்கச் செய்ததும்!
என்னை பல நேரம் தாலாட்டுக்கு பதில் கேட்டுக்கொண்டே தூங்க வைத்ததும்!
நான் என்னுள் திருப்பி,திருப்பி அசைப்போட்ட....
பாட்டி சொன்னக் கதைகளே!!!
என்றும் என்னை கவர்கிறது.
பாவம் இக்கால பிள்ளைகள் பாட்டி கதைகளும் இல்லை,
கதை சொல்லக்கூடிய பாட்டிகளும் வீட்டில் இல்லை!
எல்லாப்பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்!.
----தபால் காரன்.

Friday, August 1, 2008

துயரதுக்கு தயாராகுங்கள் அம்மா!

போகிறேன் அம்மா!
வீட்டைவிட்டு வெளியில் போகும் போது,
போய் வருகிறேன் என்ற காலம் போய் விட்டது!
இன்றொ ஒவ்வொரு கணமும்,
தினமும் கவலையாயும்,கலவரமாயும் கரைகின்றது.
அமைதிப்பூங்கா என்ற சொல்லே கண்பட்டு,இன்று யுத்த பூமியாய்,
காற்றிலெல்லாம் ரத்த வாடையும்,செத்த வாடையும்.
அந்த ரத்த வாடை நெருங்கிய ரத்தத்தின் ரத்த வாடைகள்.
என் நேரத்திலும் ஏதும் நேரலாம், நானும் கொலைசெய்யப்படலாம்,
உருட்டு கட்டையெல்லம்இப்போதில்லை!
சூலாயுதமும்,ஆர்.டி.எக்ஸ்.குண்டுகளும்,
மதவெறிகளின் கையாயுதங்கள்.
மரணிக்கலாம்,அல்லது சாட்சி என்றும் கைது செய்யப்படலாம்.
பொய் வழக்கு போடப்படலாம்.
எல்லா துயரங்களை எதிர் கொள்ள தயார் படுத்திக்கொள் !
நானும் தான் தயாராகிவிட்டேன் துயரங்களை எதிர்கொள்ள-
ஒருகாள் வெளியில் போய் வருவதற்குள்...
அம்மா! நினைத்துப்பார்க்கவே நெஞ்சை அடைக்கிறது-
ஒரு வேளை நம் வீட்டுக்கு தீவைத்தோ!குண்டுவைத்தோ,
வீடு புகுந்து கலவர காரர்களால் வெட்டியோ....
அம்மா! நெஞ்செல்லம் வலிக்கிறது.
இப்படி தானமா ஸ்டைன் பாதிரியையும்,அவர் மகன் சின்ன பாலகனையும்...
இது போல் எத்தனை உயிர்கள்....
அன்றும்,இன்றும், நாளையும்....?
-----தபால்காரன்

வின்னேறிப் போவோம் ஏரியில் நீராட!


பசடேனா (கலிபோர்னியா): சனியின் துணைக் கோளும், அதன் சந்திரனுமான டைட்டனில் மிகப் பெரிய ஏரிகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1997ம் ஆண்டு காசினி என்ற விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் கடந்த 2004ம் ஆண்டு சனி கிரகம் அருகே சென்றடைந்தது. சனி கிரகத்தையும் அதன் துணைகோளான (சந்திரன்) டைட்டனையும் அது ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையி்ல் காசினி அனுப்பியுள்ள புதிய படங்களில் டைட்டனில் திரவங்கள் கொண்ட ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நாசா கூறியிருப்பதாவது: டைட்டனில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நீர் இருப்பதுபோல தோன்றினாலும் உறுதியாக கூறமுடியவில்லை. நீர் அல்லது ஈத்தேன் போன்ற வேறு ஏதாவது திரவம் போன்ற பொருள் அதில் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

ஒருவேளை அவை வெறும் இருள் சூழ்ந்த பெரும் பள்ளங்களாக இருக்க இருக்கக் கூடும். மீத்தேன், ஈத்தேன், லேசான ஹைட்ரோகார்பன் ஆகியவை அதில் இருக்கலாம்.

இதி்ல் ஒரு ஏரி சுமார் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கிறது என்று