Sunday, July 20, 2008

கௌடாவும் கவுத்திட்டார்,காங்கிரசுக்கு மேலும் ஒரு'கை'சேதம்.

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை தோற்கடிப்பதற்கான வியூகம் குறித்து 3வது அணி மற்றும் இடது சாரி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், மாயாவதியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமியும் கலந்து கொண்டனர். இதுவரை காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வந்த தேவெ கவுடா, 3வது அணியில் இணைந்துள்ளார்.டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.3வது அணியில் கெளடாஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது., 3வது அணியில் இணைந்துள்ளார்.டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.3வது அணியில் கெளடாஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
----தபால்காரன்.

No comments: