Tuesday, July 22, 2008

கொரியர் மூலம் கோகைன் சப்ளை

அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது சென்னை காவல்துறை. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கர போதைப் பொருளான கோகைன், ஏதோ சர்க்கரை, மைதா ரேஞ்சிற்கு படு எளிதாக சென்னைக்குள் புழங்கிக் கொண்டிருப்பது தெரிந்துதான் இப்படி ஷாக்காகியிருக்கிறது.
இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.
``போனவாரம் எங்க உளவுப்பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் வந்துச்சு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தப்படுறதா தகவல். நான் எங்க டீமோட போய் சம்பந்தப்பட்ட கொரியர் ஆபீஸைச் சுற்றி பொறி வைத்துக் காத்திருந்தோம். அப்போதுதான் கென்யாவைச் சேர்ந்த ஜோசப் மியுகோ என்கிற வெளிநாட்டு ஸ்டூடண்ட், அந்த குறிப்பிட்ட கொரியர் பார்சலை வாங்க வந்திருந்தார். சந்தேகப்பட்டது போலவே அந்த பார்சல்ல 15 கிராம் கோகைன் ஒரு டைரியில மறைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். இது ரொம்பவும் பயங்கரமான போதைப்பொருள். ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இதோட பயங்கரத் தன்மைக்காகவே உலகம் முழுக்க இந்த போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்காவில் விளையிற இந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது சென்னை காவல்துறை. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கர போதைப் பொருளான கோகைன், ஏதோ சர்க்கரை, மைதா ரேஞ்சிற்கு படு எளிதாக சென்னைக்குள் புழங்கிக் கொண்டிருப்பது தெரிந்துதான் இப்படி ஷாக்காகியிருக்கிறது.
இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.
``போனவாரம் எங்க உளவுப்பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் வந்துச்சு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தப்படுறதா தகவல். நான் எங்க டீமோட போய் சம்பந்தப்பட்ட கொரியர் ஆபீஸைச் சுற்றி பொறி வைத்துக் காத்திருந்தோம். அப்போதுதான் கென்யாவைச் சேர்ந்த ஜோசப் மியுகோ என்கிற வெளிநாட்டு ஸ்டூடண்ட், அந்த குறிப்பிட்ட கொரியர் பார்சலை வாங்க வந்திருந்தார். சந்தேகப்பட்டது போலவே அந்த பார்சல்ல 15 கிராம் கோகைன் ஒரு டைரியில மறைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். இது ரொம்பவும் பயங்கரமான போதைப்பொருள். ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இதோட பயங்கரத் தன்மைக்காகவே உலகம் முழுக்க இந்த போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்காவில் விளையிற இந்த கோகைன் முதல்முறையாக சென்னையில் பிடிபட்டிருக்கிறது. சென்னையில் ஹைசொசைட்டியில பரவியிருக்கிற பார்ட்டி கலாச்சாரத்துல ஈடுபட்டு வருகிற முக்கிய வி.ஐ.பி.களுக்கு சப்ளை பண்றதுதான் இவனோட வேலை. போன் மூலமா பார்ட்டிகளை காண்டாக்ட் பண்ணி, அவங்க கார்ல வந்து வாங்கிட்டுப் போவதாகச் சொல்றான். பிடிபட்டது இப்பதான் என்றாலும், இது பல காலமா நடந்துகிட்டு வந்திருக்கு'' என்று திகில் கிளப்பினார் டேவிட்சன்.
உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இன்னும் பகீர் ரகம். ``நீண்ட நாட்களாகவே கொரியர் மூலமா போதைக் கடத்தல் நடக்கிறதா தகவல் வந்துகிட்டேயிருந்தது. இப்பதான் மாட்டியிருக்காங்க. இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். இதுல `இண்டர்நேஷனல் ஸ்மக்லர்' தொடர்பு இல்லாம இருக்காது. இதுக்குக் காரணம் இங்க இருக்குற சில தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிற பார்ட்டி மூடுதான். இவங்களோட அதீத என்ஜாய்மெண்ட் அடுத்த கட்டத்தைத் தாண்டும்போது எல்லாருக்கும் இந்த போதை தேவைப்படுது. அதுக்கு வெளிநாட்டு மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இங்கே வேண்டிய உதவிகளைச் செய்தும், பணம் கொடுத்தும் எப்படியாவது தங்கள் தேவைக்கேற்ற கோகைன் கிடைக்க உதவும்படி கேட்கிறாங்க. பணத்து ஆசையால் இந்த கென்யா ஸ்டூடண்ட் மாதிரியான ஆட்கள் எப்படியோ கடத்தல் `டான்'களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலமா பல வழிகளில் கோகைனை கொண்டு வர வைக்கிறார்கள். ஆனால் இவங்களுக்கு தொழிலதிபர்களோட இடமோ, விபரமோ தெரியாது. இப்போ புதுசா கிடைச்ச தகவல், கோகைன் பார்ட்டி கலாசாரம் இப்ப கோடம்பாக்க இளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மத்தியில வேகமா பரவிகிட்டிருக்கு என்பதுதான். இதுதான் ரொம்ப கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இது தொடர்பா யார்? யார்? இதைப் பயன்படுத்துறாங்க. இவங்களுக்கு சப்ளை பண்றது யார்? என்கிற விவரத்தை ரகசியமா சேகரிக்கிறோம்'' என்று கவலையோடு சொன்னார்.
``இப்போ கொரியர்லதான் எந்தப் பொருளையும் சுலபமா அனுப்ப முடியும். செக்கிங் கிடையாது. ஆள் யார்னு தெரியவேண்டியதில்ல. இப்படி பல வசதிகள் இருக்கிறதால கடத்தல்காரங்க கொரியரைப் பயன்படுத்துறாங்க. இது சம்பந்தமா கொரியர் நிறுவனங்களை அழைத்து எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுத்தோம். அதுல மாட்டினதுதான் இந்த கென்யா ஸ்டூடண்ட். வெளிநாட்டுலருந்து வந்து படிக்கிற மாணவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே கண்காணிக்கணும். அப்போதான் இதுமாதிரியான கடத்தலைத் தவிர்க்க முடியும்'' என்றார், போதை தடுப்புப் பிரிவு அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம்..முதல்முறையாக சென்னையில் பிடிபட்டிருக்கிறது. சென்னையில் ஹைசொசைட்டியில பரவியிருக்கிற பார்ட்டி கலாச்சாரத்துல ஈடுபட்டு வருகிற முக்கிய வி.ஐ.பி.களுக்கு சப்ளை பண்றதுதான் இவனோட வேலை. போன் மூலமா பார்ட்டிகளை காண்டாக்ட் பண்ணி, அவங்க கார்ல வந்து வாங்கிட்டுப் போவதாகச் சொல்றான். பிடிபட்டது இப்பதான் என்றாலும், இது பல காலமா நடந்துகிட்டு வந்திருக்கு'' என்று திகில் கிளப்பினார் டேவிட்சன்.
உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இன்னும் பகீர் ரகம். ``நீண்ட நாட்களாகவே கொரியர் மூலமா போதைக் கடத்தல் நடக்கிறதா தகவல் வந்துகிட்டேயிருந்தது. இப்பதான் மாட்டியிருக்காங்க. இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். இதுல `இண்டர்நேஷனல் ஸ்மக்லர்' தொடர்பு இல்லாம இருக்காது. இதுக்குக் காரணம் இங்க இருக்குற சில தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிற பார்ட்டி மூடுதான். இவங்களோட அதீத என்ஜாய்மெண்ட் அடுத்த கட்டத்தைத் தாண்டும்போது எல்லாருக்கும் இந்த போதை தேவைப்படுது. அதுக்கு வெளிநாட்டு மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இங்கே வேண்டிய உதவிகளைச் செய்தும், பணம் கொடுத்தும் எப்படியாவது தங்கள் தேவைக்கேற்ற கோகைன் கிடைக்க உதவும்படி கேட்கிறாங்க. பணத்து ஆசையால் இந்த கென்யா ஸ்டூடண்ட் மாதிரியான ஆட்கள் எப்படியோ கடத்தல் `டான்'களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலமா பல வழிகளில் கோகைனை கொண்டு வர வைக்கிறார்கள். ஆனால் இவங்களுக்கு தொழிலதிபர்களோட இடமோ, விபரமோ தெரியாது. இப்போ புதுசா கிடைச்ச தகவல், கோகைன் பார்ட்டி கலாசாரம் இப்ப கோடம்பாக்க இளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மத்தியில வேகமா பரவிகிட்டிருக்கு என்பதுதான். இதுதான் ரொம்ப கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இது தொடர்பா யார்? யார்? இதைப் பயன்படுத்துறாங்க. இவங்களுக்கு சப்ளை பண்றது யார்? என்கிற விவரத்தை ரகசியமா சேகரிக்கிறோம்'' என்று கவலையோடு சொன்னார்.
``இப்போ கொரியர்லதான் எந்தப் பொருளையும் சுலபமா அனுப்ப முடியும். செக்கிங் கிடையாது. ஆள் யார்னு தெரியவேண்டியதில்ல. இப்படி பல வசதிகள் இருக்கிறதால கடத்தல்காரங்க கொரியரைப் பயன்படுத்துறாங்க. இது சம்பந்தமா கொரியர் நிறுவனங்களை அழைத்து எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுத்தோம். அதுல மாட்டினதுதான் இந்த கென்யா ஸ்டூடண்ட். வெளிநாட்டுலருந்து வந்து படிக்கிற மாணவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே கண்காணிக்கணும். அப்போதான் இதுமாதிரியான கடத்தலைத் தவிர்க்க முடியும்'' என்றார், போதை தடுப்புப் பிரிவு அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம்..

No comments: