Monday, July 21, 2008

சிந்திக்க சில வரிகள்

மனிதவாழ்கை மகத்தான அருமைக்குரியது. ஒவ்வொறு வருடமும் பிறந்தநாள் வருகிறது.சிலருக்கு விதிவிலக்கு(லீப்) 4வருடங்களில்). சொல்லவந்த விடயம்-யாதெனில் பலர் ஆடம்பரமாய் வேண்டாதஅனாவசிய செலவுசெய்து விழாப்போல் கொண்டடுகின்றனர்.அவ்வாறுகொண்டாடப்படும் ஒவ்வொருபிறந்தநாளும்364.99நாட்கள்இறந்தபின்வருவதே.இன்று-நாளைய, இறந்தநாள். நாட்களும்,வருடங்களும் வந்துபோய் கொண்டிருப்பதில் பிறந்த நாளன்று மெழுகுவர்தி கொழுத்திஅணைப்பதனால் பயன்உண்டா? யாராவதுஒருத்தர் வாழ்வில் விளக்கெற்றலாமே.பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென்றால் மிக எளிய முறையில் செய்யலாம்.தெருவில் உள்ள ஏழை ஒன்றோ ,இரண்டோ குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கோ,மாதத்திற்கோ ஆகும் செலவை ஏற்கலாமே?. மேலும் தியானம்...இன்னும் தெய்வவழிபாடில் கவனம் செலுத்தலாமே?.அவ்வாறு செய்யின் நம் மறைவிற்கு பின் ஒரு சிலராவது கண்னீர்சிந்தி நமக்காய்இறைவனிடம் வேண்டினால் நாம் செய்த பலபாவங்களில் சில மன்னிக்கப்படலாம். குறிப்பு:இஸ்லாமியர் பிறந்த நாள் கொண்டாடமாட்டார்கள்.
Thanks for:www.tamilsangami.blogspot.com

No comments: