Monday, July 21, 2008

"நடப்பதெல்லாம் நன்மைக்கே!"

"நடை" ஒரு கலை. வாழும் கலை.எல்லாம் வல்ல இறைவன் நம்மை அழகுற படைத்து வடிவமைதுள்ளான். நாம் மறு இடம் செல்ல நமக்குகால்களை தந்துள்ளான்.இடப்பெயர்ச்சி அதி முக்கியம் அல்லவா? இன்று நம்மில் எத்தனை பேர் நடக்கிறோம்.காலை எழுந்து இரவு படுக்கும் வரை,பைக்,கார் ,ஆட்டோ ,பஸ் என ஊர்வதில்தான் நாம் கவனம் செலுத்துகிறோம்,சிறு தூரம் போக வேண்டும் என்றாலும் நமக்கு "வீல்" தேவைப்படுகிறது, ஆனால் யதார்த்தம் என்ன என்றால்,நடப்பது ஒன்று மட்டுமே நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது.ஆனாலும் இதை நிறைய பேர் உணர்ந்ததாக இல்லை.நடப்பதால் சில பல நோய்கள் அண்டாது.டயாபடீஸ் எனும் நீரிழிவு நோய்க்கு அரு மருந்து நடை,நடை,நடைதான். நம் உடலில் உள்ள நச்சு அமிலங்கள் நடப்பதால் வெளியாகி விடுகின்றன.ஆதலால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு பொலிவு பெறுகிறது . நடைக்கு மிஞ்சி வேறு இல்லை எனும் அளவுக்கு ரொம்ப முக்கியம்.நடக்கவும் செய்யாமல்,நோய்களையும் விலைக்கு வாங்கி கொண்டு ,மாத்திரைகளை எதோ சாப்பாடு மாதிரி விழுங்கிக்கொண்டு,கடைசியில்,உணவேமருந்து எனும் நிலை மாறி,மருந்தே உணவு எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறோம் எனவே இனியாவது நடைக்கு முக்கியத்துவம் கொடுத்து,தினமும் சரிவர செய்தால்,உடல்,உள்ளம்,பயன் பெறும்,காசுந்தேன்!
என்றும்
அன்புடன்ஏ.ஆர்.அப்துல் லத்தீப்.
Thanks for:www. tamilsangami.blogspot.com

No comments: