Saturday, July 19, 2008

தென் ஆப்பிரிக்க காந்தி

நெல்சன் மண்டேலா
தென் ஆப்பிரிக்க காந்தி என்று அழைக்கப்படும் நெல் சன் மண்டேலா 18.7.2008 அன்று 90-வது வயது முடிந்து 91-ஆவது அகவையில் நுழை கிறார். தென் ஆப்பிரிக்க நாட்டில் அவரது பணியை பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன.ஆனால் அவருடைய வாழ்க்கையில் 27 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடினார். அவர் செய்த குற்றம்தான் என்ன? தனது மக்களையும் நாட்டையும் நேசித்ததுதான் குற்றம். எல்லாவற்றையும்விட சுதந்திரத்தை தனது உயிரை விட அதிகமாக நேசித்தார். ஆகவேதான் மற்றவர்கள் போன்று வெளியே நடமாடும் சுதந்திரத்தை இழந்து காராக் கிருகத்தில் அடைக்கப்பட்டு கிடந்தார்.`உன் நிறம் கருப்பு `என் நிறம் வெளுப்பு ஆகவே நான் வசிக்கும் பகுதிகளில் நீ வசிக்கக் கூடாது. `என் பிள் ளைகள் படிக்கும் பள்ளி களில் உன் பிள்ளைகள் படிக்க முடியாது. ஒரே பேருந்தில் போக முடியாது. ஒரே இடத் தில் தேநீர் குடிக்கக் கூடாது! என்று கூறியது நிறவெறி அரசு. இது எங்கோ குடியேறிய இடத்தில் கூறப்பட்டது அல்ல. தங்கள் சொந்த நாட் டில் நடந்த கதை இது. இது எப்போதோ நடந்த ஒரு இருண்ட காலத்துக் கதையும் அல்ல. இருபதாம் நூற்றாண் டின் முடிவில் நடந்த கொடுமை இது. இதை எதிர்த்து போராடிய இயக்கத் தின் தலைவன்தான் நெல்சன் மண்டேலா.இன ஒதுக்கலின் கொடூரம்இன ஒதுக்கலின் கொடூ ரத்தை நம்மால் எண்ணிப் பார்ப்பது கடினம். தென்னாப் பிரிக்கா `குடியரசில் 90 சதவீத நிலம், 50 லட்சம் வெள்ளையர் களுக்குச் சொந்தம். இரண் டரை கோடி மண்ணின் மைந்தர்களுக்கு 10 சதம்தான் மிச்சம். சொந்த நாட்டில் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. தினந்தோறும் 100 கறுப்பினக் குழந்தைகள் பட்டினியால் இறந்தன. வெள் ளையர்களைக் காட்டிலும் கறுப்பினத்தவர்களிடையே சாவு விகிதம் ஆறு மடங்கு அதிகம்.உலகம் முழுவதும் தென் னாப்பிரிக்க அரசின் `அபார்த் தைடு என்னும் நிறவெறிக் கொள்கையை எதிர்த்தும், தென்னாப்பிரிக்க அரசு உலக அபிப்பிராயத்தை துச்ச மெனத் தூக்கி எறிந்த தற்கு பின்னணியில் உள்ள சக்திகள் அமெரிக்க ஏகாதி பத்தியமும், அதன் தவறான நண்பனான அன்றைய பிரிட்டிஷ் பிரத மர் தாட்சரும் தான் காரணம். அதற்கு முக்கிய காரணம் தென் ஆப்பிரிக்க பூமியில் புதைந்து கிடக்கும் கனி வளங்களும் அதனைச் சுரண் டிக் கொழுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தான்.நிறவெறியை எதிர்த்து இயக்கம்நிறவெறிக் கொள்கையை எதிர்த்து முதலில் (1943-ல்) ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய நெல்சன் மண் டேலா பின்னர் வால்டர் சிஸ்லு, ஆலிவர் டாம்போ போன்றவர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கி இன வெறிக்கு எதிரான முன்னணிப் படையாக மாற்றினார்.1950-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு முகாமின் தொண் டர் படையின் முதன்மை தளபதியாக இருந்து இன வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் என்று முதல் கட்ட நடவடிக்கையினை மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து `பாண்டூ கல்வித் திட்டத்தையும் உள்ளே நுழைவதற்கான `அனுமதி சட்டத்தையும் மக்கள் இயக் கம் மூலம் எதிர்த்தார்.1952-இல் சட்டத்தில் பட் டம் பெற்றார்.1955-ல் இனவெறியில்லாத ஜனநாயக தெற்கு ஆப்பிரிக் காவை அமைப்பதற்குரிய முன்னோடித் திட்டமாக விடுதலைக்கான உரிமைப் பத்திரத்தை கிளிப் நகரில் கூடிய மக்கள் கூட்டத்தில் ஏற்றுக் கொண்டனர். தடைச் சட்டம் இருந்த காரணத்தால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியா விட்டாலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மண்டேலா முன்னணியில் இருந்தார்.1960-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21-ஆம் நாள் சார்ப் விலா என்ற இடத்தில் உள்ளே நுழைவதற்கான அனுமதி சட்டத்தை எதிர்த்து அமைதி யான முறையில் கிளர்ச்சி செய்த காரணத்தால் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அரசால் அவசர கால நிலை பிர கடனப்படுத்தப்பட்டு ஆப்பி ரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.மண்டேலா தலைமறைவு வாழ்க்கையில் இயங்கினார். 1962-ஆம் ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் இருந்து வெளிவந்து ஆப்பிரிக்காவில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று பின்னர் விடுதலைக் காக ஆதரவினை தேட அய்ரோப்பா சென்றார். ஆண் டின் இறுதியில் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றதற்காகவும், சட்ட விரோதமான போராட்டத்தை தூண்டி விட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு அய்ந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருக்கும் பொழுது ரிவோ னியா வழக்கில் முதல் எதிரி யாக வழக்கு தொடரப்பட்டு நாச வேலைகட்கு திட்டம் தீட்டினார் என்றும் அரசுக்கு எதிராக கொரில்லா யுத்தத் திற்கு ஆயத்தம் செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு 1964-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக் கப்பட்டது. தென் ஆப்பிரிக் காவில் ஆயுள் தண்டனை என்பது ஒருவரது இயற்கை யான ஆயுள் முடியும் மட்டும் என்பதாகும்.இவரது விடுதலைக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்கம் முழங்கிய முழக்கம்.`மண்டேலாவை விடுதலை செய் என்பதுதான்.அய்க்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள் சபை, அய்ரோப்பியக் குழு, இவை அனைத்தும் அவ ரது விடுதலையைக் கோரிய பேரமைப்புகள். இவை தவிர உலகத் தொழிற்சங்க சம்மே ளனம், மாதர், இளைஞர், ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் அவரது விடுதலையைக் கோரி வந்தன.விடுதலை44 வயதில் சிறைக்குள் சென்ற மண்டேலா தனது 71-ஆவது வயதில் (1990 பிப்ரவரி 11-ஆம் தேதி) விடுதலை செய் யப்பட்டார்.உலக நாடுகள் மண்டேலா சிறையிலிருந்து வெளிவரும் காட்சியைத் தொலைக்காட் சியில் ஒளிபரப்பு செய்து உலக மக்கள் அதைக் காண வைத்தன.சிறை வாயிலை விட்டு வெளியே வந்தபின் பெருந் திரளாகக் கூடியிருந்த மக்களி டையே அவர் கூறுகிறார்:`நான் வெளியே வந்து மக்கள் கூட்டத்துடன் கலந்து எனது வலது கை முட்டியை உயர்த்துகிறேன். கடந்த 27 ஆண்டுகளாக நான் அப்படிச் செய்ய இயலவில்லை. அது எனக்குப் புதிய வலிமையை யும் மகிழ்ச்சியையும் அளித் தது. என் வாழ்க்கை புதிதாக தொடங்கப் போகிறது என உணர்ந்தேன். பத்தாயிரம் நாள்களுக்கு மேற்பட்ட என் சிறைவாசம் இறுதியாக முடிந்து விட்டது என்றார் அவர்.குடியரசுத் தலைவர்1994-இல் சுதந்திரமான தேர்தல் நடைபெற்று தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவ ராக மண்டேலா பொறுப் பேற்றார். 1999-ல் அதிபர் பதவியின் காலம் முடிந்த வுடன் தனது பொறுப்புக் களை ஒப்படைத்தார்.தற்பொழுது தன்னுடைய நேரத்தை தென்னாப்பிரிக்கா வில் எய்ட்ஸ் நோயை எதிர்த்து போரிடுவதில் செலவழிக் கிறார்.இந்திய அரசின் உயர்ந்த விருதான பாரத ரத்னா, நேரு விருது மற்றும் உலக நாடுகளின் பல விருதுகளைப் பெற்றவர் மண்டேலா.மண்டேலாவின் வாழ்க்கை யானது தன்னம்பிக்கை, கொள்கையில் தீவிரப் பற்று, இன்னல்களையும் எதிர்ப்பு களையும் கண்டு அஞ்சாமை, எதிரிகளுடனும் இணக்கத் துடன் நடந்து கொள்வது, மனிதநேயம் ஆகிய குணங் களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
Posted by tamilsangami

No comments: