Tuesday, July 29, 2008

தேவையின் கொலை

குற்றத்தில் புழுவாய் நெளிந்தேன்-
புழுவை தூண்டிலில் மாட்டியப்பின்.
மீன் தூண்டிலில் மாட்டித்துடித்ததும் நானும் துடித்தேன்.
பின் மீன் குழம்பு நியாபகம் வர,
மறந்தேன் மீனுக்குத்துடிப்பதை!
புழு தின்ற மீன் துடிக்கவில்லை!
மீன் திங்க நான் துடிப்பதா?
வயிற்றுப்பாடமும், நாவின் சுவைத்தவிப்பும் மறக்கச் செய்தது!
இது தேவையின் கொலை,
சிந்தைச்சொல்லியது,
குழம்பில் மீன் துள்ளியது.
------தபால்காரன்.

No comments: